செவ்வானச் சிதறல்கள்…

தமிழ்

விட்டொழிந்து போகின்றேன் – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 3

by on Feb.03, 2012, under கவிதைகள், தமிழ்



இது தரங்கம் புகழ் சுபாங்கன் எனது கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1  கவிதைக்கு எழுதிய  வேண்டாம்.. விலகிவிடு! எதிர்க்கவிதைக்காக எழுதப்பட்ட எதிர்க்கவிதை.

விட்டொளிந்து போகின்றேன்

விட்டொழிந்து போகின்றேன்

என்னருமை மாமோய்…!

வார்த்தைகள் வலித்ததாலா

வருந்தியெனைத் விலக்குகிறாய்…!

 

யுத்தங்கள் மலிந்த பூமியில்

யுவ ரோஜா கொடுத்தவனே…!

எத்தனை முறை தடுத்தும்

எதேற்சையாய் நடப்பது போல்

எட்டிச் சுவைத்தவனே…!

 

சத்தியக்காட்டுச் சந்தையிலே

சனிக்கிழமை மாலையிலே

சாண்டிலியன் புத்தகம் தரும்

சாட்டில் எனைத் தொட்டவனே…!

 

சிரித்த அந்தத் தோற்றத்தில்

சிந்தை மயங்கி நிற்க

விந்தை பல புரிந்து

விந்தணுவும் தந்தவனே…!

 

மாசம் மூன்றாக…

நாசமாப் போன வயிறு

தோசம் பாராமல்

மோசமாய் வந்து நிற்க…!

 

செய்த குட்டு வெளியே வந்து – என்ன

செய்ய என்று கேக்க

செண்பகமே… இது வேண்டாமென்று

செருப்பால் எனை அடிப்பது போல்

கருக்கலைக்கச் சொன்னவனே…!

 

இத்தனையும் பண்ணிய உனை ….

அத்தானே வீடு வந்து

சம்பந்தம் பேசச்சொல்ல

சம்மந்தமே இலாதவனாய்

சாதித்து மறைந்தவனே…!

 

வாழ்வை நான் தொலைத்து

வாழாவெட்டியாய் நிற்க

பெத்த கடனுக்காய் அப்பன்

பாத்த மாப்பிள்ளையை

கட்ட நினைக்கையிலே

காதல் மொழி பேசுறியே?

 

நீயொன்றும் சொல்லவேண்டாம்!

நானே போகின்றேன்!

விலகியென்ன விலகி

விட்டொழிந்து போகின்றேன் – ஆம்

விட்டொழிந்து போகின்றேன்…!

3 Comments :, , , , , , more...

பொன்னியின் செல்வன் பாத்திரப்படைப்புகள் – 1

by on Feb.01, 2012, under தமிழ், புத்தகங்கள்

முன்னர் நான் டுவிட்டரிலும், பேஸ்புக்கிலும் பகிர்ந்த வண்ணம் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு முன்னரே அமரர் கல்கி எழுதிய வரலாற்றுக் காவியமான பொன்னியின் செல்வனை வாசிக்கக் கிடைத்தும் வாசிக்காமல் தவிர்த்திருந்தேன். எப்போது பார்த்தாலும் கண்ணுக்கு எட்டிய தொலைவில் புத்தக அலுமாரியில் தெரிந்த அந்த புத்தகங்களை நான் தொடப் பயந்திருந்தேன்.

அப்படி இருந்தும் 2004ம் ஆண்டு ஒருமுறை முதல் பாகத்தை எடுத்து வாசிக்க ஆரம்பித்த போது, வந்தியத்தேவன் ஆற்றங்கரை ஓரமாக குதிரையிலே சென்று கொண்டிருந்த அந்த வர்ணணையை வாசிக்கும் போது ஏனோ அதனுடன் ஒன்ற முடியாமல் போய்விட்டது. குறைந்தது ஒரு ஐந்து பக்கங்கள் மட்டும் வாசித்துவிட்டு அலுத்துவிடவே அப்படியே வைத்துவிட்டேன். மீண்டும் இத்தனை வருடங்களுக்கு பிறகு, அதுவும் சிங்கை நகரிலே வேலைக்குச் செல்லும் போது, அன்டிரோய்டு அலைபேசியில் ஒரு செயலியாக நிறுவி வாசிக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இதனால் சில ஆண்டுகளாக விட்டுப்போயிருந்த தூங்குவதற்கு முன்னர் புத்தகம் வாசிக்கும் பழக்கமும் மீண்டும் தொற்றிக்கொண்டது.

இப்படியாக, வேலைக்கு போகும் போதும் வரும்போதும் தொடரூர்ந்துக்ளிலும், இரவு படுக்கைக்கு முன்னரும் கிடைக்கும் சில மணித்தியாலங்களை பயன்படுத்தி பொன்னியின் செல்வனை முற்றாக வாசித்து முடித்துவிட்டேன். இதனை வாசிக்கும் போது உண்டான உணர்வுகள் விசித்திரமானவை. உண்மையிலேயே, நானும் ஓர் சோழநாட்டவனாக மாறி அந்தக் கதையிலேயே வாழ்ந்து வந்தேன். காட்டாக, கரிகாலன் இறக்கும் போது உண்டான இனம்புரியாத சோகம், நந்தினி அத்துணை எழில் மிகுந்தவளாக இருந்தும் மோகன சுந்தரியாக இருந்தும் அவள் பாண்டிநாட்டினருடன் சேர்ந்து செய்த செயல்களால் ஏற்பட்ட வெறுப்பு, வந்தியத்தேவனுடன் பயணிக்கும் போதெல்லாம் உண்டான உற்சாகம், வீர வைஷணவனுக்கும் வந்தியத்தேவனுகும் இடையில் நடக்கும் கலக்கலான நகைச்சுவையான உரையாடல்கள், பொன்னியின் செல்வனின் ஆளுமை, தியாகம், தெளிவு என அனைத்துமே என்னையும் என்னுடைய சாதாரண நிகழ்வுகளையும் பிரதிபலித்தன. அந்தளவு ஆழமாக, வலுவான பாத்திரங்களாக ஒவ்வொரு பாத்திரங்களையும் கல்கி படைத்திருந்தார்.

அமரர் கல்கியின் பாத்திரங்களை எனது பார்வையில் சற்றே உரைக்க நினைக்கிறேன்:

  • மணிமேகலை: கடம்பூர் சம்புவரையரின் அரண்மனையிலே சர்வ வல்லமை பொருந்திய ஒரு இளவரசியாக அறிமுகமானவள். அவளுடைய தமையனின் மூலம் வந்தியத்தேவனின் வீர சகாசங்களை அறிந்து நேரிலே பார்ப்பதற்கு முன்னரே வந்தியத்தேவனின் மேல் அன்பு செலுத்த ஆரம்பித்தவள். தனது துடுக்கான பேச்சினாலும் வஞ்சகம் இல்லாத குணத்தினாலும் இவளின் பாத்திரம் பொன்னியின் செல்வனில் சிறந்து நிற்கின்றது. சோழசாம்ராட்ச்சியத்தை அடுத்து ஆழத்தகுதியான கரிகாலனை மணக்கும் படி வற்புறுத்தியும் வந்தியத்தேவனின் நினைவால் எல்லாவற்றையும் தட்டிக்களித்தவள். யாழ்வாசிப்பதிலும் பாட்டு பாடுவதிலும் மிகையானவள். எல்லாவற்றுக்கும் மேலாக வல்லவரையன் வந்தியத்தேவ்ன் பால் அன்பு கொண்டதன் காரணமாக, செய்யாத கொலையையும் தானே செய்த்ததாக ஒத்துக்கொள்ள துணிந்தவள். நந்தினி, கரிகாலனை கொல்ல முனைந்த போது இவளைப் பயன்படுத்தியே வந்தியத்தேவனை சிக்க வைக்க முயன்றாள். என்ன தான் இருந்தாலும், மணிமேகலையின் தூய்மையான அன்பையும் புனியமான காதலையும் அப்பட்டமில்லாத குழந்தைத் தனத்தையும் என்னால் மறக்கமுடியவில்லை. தவிர கல்கி இவளை வாசிக்கத் தெரியாத பெண்ணாகக் காட்டியிருந்தமை, அக்கால சிற்றரசர்களின் நிலையை கல்வித்தரத்தை சொல்வதாகக் கொள்ளலாமா?
  • பூங்குழலி: பொன்னியின் செல்வனில் மிகவும் பிடித்த பெண்பாத்திரத்தில் ஒன்று பூங்குழலி. பொன்னியின் செல்வன் வாசித்த காலங்களில் கனவுகளில் கூட பூங்குழலி வந்தாள் என்பதை நான் மறுக்க முடியாது. பூங்குழலியின் குணாதிசயங்களையும், கல்கி அவளின் அங்க அடையாளங்களை விமர்சித்த போது, பூங்குழலி என்ற பாத்திரத்துக்கு நான் ஓர் உருவம் கொடுத்தேன். ஒஸ்தி படத்தில் நெடுவாலியாக (ரிச்சா) வரும் அந்தப் பெண்ணின் உருவத்தை அப்படியே பூங்குழலி எடுத்துக்கொண்டாள். அந்த எதையோ தொலைத்து விட்ட்தைப் போன்ற முகம்; ஆனாலும் ஒரு வீரம் நிறைந்த எதற்கும் அஞ்சமாட்டேன் என உரைத்துக்கொண்டே இருக்கின்ற கண்கள், நீண்ட கூந்தல் என அனைத்தையும் நான் நெடுவாலியாகவே உணர்ந்தேன். படகிலே அமர்ந்து “அலைகடலும் ஓய்ந்திருக்க அகக்கடல் தான் பொங்குவதேன்” என்று பூங்குழலி பாடும் போது ஒவ்வொரு முறையும் ஒரு சொல்லமுடியாத சோகம் வந்து நெஞ்சை அழுத்தும். சில வேளைகளில் அவள் பிச்சி போல் முறண்டு பிடித்துக் கொண்டு நடந்தாலும், அருண்மொழி மேல் கொண்ட அவளது காதலும், பின்னர் அரண்மனையில் வானதிமேல் அவள் பாராட்டிய பொறாமையும், தன் அத்தையைக் கொன்றவர்களை விரட்டிச் சென்ற சமயோசித புத்தியும் எல்லாவற்றுக்கும் மேலாக யதார்த்தத்தை ஏற்றுக்கொண்டு, சாந்தன் அமுதனின் காதலை ஏற்றுக்கொண்டதும் என அவளது பாத்திரம் பல பரிணாமங்களை எடுத்து இயம்பும். ஒரு கட்டத்தில் அவள் மேல் நானே என்னை அறியாமல் காதல் கொண்டதும் உண்மை தான். பொன்னியின் செல்வனில் என்னைக் கவர்ந்த முறட்டுப் பெண் அவள்

 

-தொடரும்

Leave a Comment :, , , , , , , , more...

கொன்றுவிடு – காதலர் மாதச் சிறப்புக் கவிதை – 1

by on Feb.01, 2012, under கவிதைகள், தமிழ்

இதோ, மற்றுமொரு காதல் மாதம் பிறந்து விட்டது. எல்லா மாதங்களிலும் காதல்கள் நடக்கின்றன. காதல்த் தோல்விகளும் நிகழ்கின்றன. என்னவோ தெரியாது இந்த மாதத்தில் மட்டும் அவை சற்றே தூக்கலாக நடக்கும். காதலர்களின் மாதம், எத்தனையோ காதல்களை உருவாக்கப்போகின்றது; எத்தனையோ மனங்களைச் கிழித்துச் சின்னாபின்னமாக்கி தெருவிலே தூக்கி வீசப்போகின்றது. அனைவருக்கும் எனது காதலர் மாத வாழ்த்துக்கள்

கொன்றுவிடு – 1

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

அன்று நாம் விட்டுப் பிரிந்த  அந்த நிமிடத்தின்

கம்பிகளைப்

பிடுங்கி எனைக் கொன்றுவிடு!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

தினமும் நீ இறக்கிறாய் – தெரியும்!

மறுபடியும் ஜனனிக்கிறாய் – அறிவேன் நான்!

இறக்கின்ற வலிதந்த வேதனை வார்த்தைகளின்

கொடூரத்தை விடுத்து

எனக்காக மீண்டும் இறக்க வருகிறேன்

என்கிறாயே – வியக்கிறேன் நான்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

நம்மைப் பொறுத்தவரை,

முடிந்துவிட்ட காவியம் இது!

உனக்கு மட்டும் எப்படித்தான்

தொடர்கதையானதோ – காதல்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

இறுதியாய்ச் சொல்கிறேன்!

மீண்டும் எனைச் சீண்டாதே!

யதார்த்ததை மீறிக் காதலித்து

தொலைத்த காதல் போதும்!

கடைசியாக ஒருமுறை

யதார்த்தமாக வாழ நினைப்பவள் நான்!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

 

சொற்கள் கொண்டு

வதைக்காமல் – முடிந்தால்

கற்கள் தேடி எனைக்

கொன்றுவிடு…! கொன்றுவிடு…!

 

தயவு செய்து கேட்கிறேன்!

எனைக் கொன்றுவிடு!

4 Comments :, , , , , , , , more...

உழுத்துப்போன உழுந்து/உளுந்து

by on Jan.16, 2012, under ஈழம், தமிழ்

அம்மாவின் இனிப்பான சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் இந்தஆண்டு பொங்கலின் மிகப்பெரிய இழப்பு எனக்கு!” என்று இன்று காலை எனது மனதில் இருந்ததை டுவிட்டினேன்.

உண்மையில், இனிப்புப் அதிகம் விரும்பி உண்ணும் எனக்கு, சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் என்றால் அலாதிப் பிரியம். இந்த முறை பொங்கலில் ஒரு சிறு கவளம் அரிசி கூட உண்ணக் கிடைக்கவில்லை. சிங்கையின் சிலிர்ப்பில், நூடுல்சும் பாண்ணும் தான் அன்றைய உணவாகப் போனது.

இதற்கிடையில், இந்த டுவிட்டைப் பார்த்த ஒரு தமிழக நண்பி என்ன உளுந்தா?? என்று கேட்க, உழுந்து/உளுந்து சம்பந்தமாக ஓர் தேடலில் இறங்கினேன். தேடுகின்ற போது, வியப்பளிக்கும் வகையில், ழுகரமும் ளுகரமும் சம அளவில் பயன்படுத்தப் பட்டிருந்தது. கூகுளில் எந்தவித வடிகட்டுதலும் இல்லாமல் தேடியபோது கட்டுரைகள் ஆக்கங்கள் பலவற்றில் இரண்டும் பரவலாக பயன்படுத்தப்பட்டிருந்தன. படங்களை மாத்திரம் என்று வடி கட்டியபோது, இரண்டிலும் ஏராளமான படங்கள் வந்தாலும் உழுந்து சார்ந்த படங்கள் மிக மிக அதிகமாக ளுகரம் பயன்படுத்தப்பட்டே வந்திருந்தது.

இவ்விடயமாக பேஸ்புக்கில் நண்பர்களுடன் பின்னர் நடாந்த கருத்தாடலை இங்கே தர விரும்புகின்றேன். அதில் வெறும் உழுந்துடம் மாத்திரம் நின்றுவிடாது மேலும் பல சொற்கள் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.

நிரூஜா மா Black Gram: உழுந்து/உளுந்து எந்த வார்த்தைப் பிரயோகம் சரியானது?
Gopikrishna Kanagalingam நான் அறிந்தவரை உழுந்து!
நிரூஜா மா இலங்கையில், எனக்கு தெரிந்த வரைக்கும் உழுந்து என்று தான் பயன்படுத்தி வந்திருக்கின்றேன். ஆனால், இன்று ஒரு தமிழ்நாட்டு சகோதரியுடன் உரையாடும் போது அங்கே “உளுந்து” என்ற வார்த்தையே பயன்படுத்தப்படுகின்றது.
நிரூஜா மா ஆக, நாங்கள் தவறாக பயன்படுத்துகின்றோமா அல்லது அவர்களுடையது தவறா, அல்லது இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தைகளா?

Gopikrishna Kanagalingam http://www.tamilvu.org/library/l1210/html/l1210217.htm

// இரும் பனிப் பருவத்த மயிர்க் காய் உழுந்தின்

அகல் இலை அகல வீசி, அகலாது

அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,

பரும யானை அயா உயிர்த்தாஅங்கு //

Gopikrishna Kanagalingam http://ta.wikipedia.org/wiki/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81

இரண்டும் சரி என்றவாறு தமிழ் விக்கி சொல்கிறது

நிரூஜா மா இணையத்தில் தேடிய போதும் இரண்டு சொற்களின் பிரயோகம் சம அளவில் இருந்தது. தவிர விக்கியில் உள்ளதை அப்படியே ஏற்றுக்கொள்ள முடியாது! என்னை போன்ற ஒருவர் அக்கட்டுரையை எழுதும் போது, இணையத்தில் பரவலாக இரண்டு சொற்களும் பயன்படுத்தப் பட்டிருப்பதால் இரண்டும் சரி என்ற எண்ணத்துக்கு வரலாம்.
நிரூஜா மா தவிர, அந்த கட்டுரைக்கு தகுந்த உசாத்துணைகள் வழங்கப்ப்ட்டிருக்கவில்லை!
Gopikrishna Kanagalingam அந்த சங்ககாலப் பாடலில் “உழுந்து” என்று தான் இருக்கிறது.
ஆகவே “உளுந்து” என்பதற்கான ஆதாரம் தான் தேவை.
Janakan Sivagnanam உழுந்து என்பது சரியாக இருக்க வாய்ப்புள்ளது.. தமிழறிஞர்கள் விளக்கவும்.
Gopikrishna Kanagalingam இணையத்தின் பரவலான பயன்பாட்டுக்காக ஒரு சொல்லை சரி என்று எடுக்க முடியுமோ தெரியாது.
நியாபகம், ஞாபகம் இரண்டும் சரியானவை என்ற முடிவை எடுக்கத் தயாரா?
நிரூஜா மா ஆனால், கூகிளில், உழுந்து/உளுந்து என்று படங்கள் வாரியாக (Image Search) தேடும்போது பலத்த வித்தியாசம் இருக்கிறது
Gopikrishna Kanagalingam ‎Kaa Sethu வரவேற்கிறோம்.
நிரூஜா மா அடே கொல்லையில போவாரே! ஞாபகம் எப்படியடா நியாபகம் ஆகியது!!!! நன்றி Gopikrishna Kanagalingam; இன்று தான் இதைப் பார்த்தேன்.
Kaa Sethu உழுந்து இலக்கியங்களில் காணப்படுகிறதாக்க் குறிப்புகள் உண்டு. ஆனால் ஆதியில் எந்த வேரில் இருந்து சொல் உருவானது எனக் கண்டறியவில்லை.
Kaa Sethu உழுந்து என எழுதினாலும் அதை உளுந்து எனவே பெறும்பாலானோர் தற்காலத்தில் பலுக்குகின்றனர் !
நிரூஜா மா ஆனால் Kaa Sethu ஐயா, தமிழ்நாட்டில் உளுந்தூர்பேட்டை என்ற ஊரின் பெயரிலும் ளுகரமே பயன்ப்டுத்தப்பட்டிருப்பதாக ஞாபகம் இருக்கிறது.
நிரூஜா மா அமெரிக்க ஆங்கிலத்துக்கும், இங்கிலாந்து ஆங்கிலத்துக்கும் இடையில் இருக்கும் வேற்றுமை போல் தமிழிலும் இருப்பது போல் தோன்றுகிறது
நிரூஜா மா இதற்கு உதாரணமாக, “கறுப்பு” என்று நாம் இங்கு கருமை நிறத்தைக் குறிக்க இலங்கயில் பயன்படுத்தும் சொல், தமிழ்நாட்டில் “கருப்பு” என்றே பலுக்குகின்றார்கள்.

Kaa Sethu கருப்பு – கறுப்பு பற்றிய இராம.கி. விளக்கங்கள் தெளிவானவை. http://valavu.blogspot.com/2006/05/2.htmlபாருங்கள்

valavu.blogspot.com

வாழ்க்கைச் சுவடுகளும், சிந்தையும், பார்வையுமாய் வளைய வரும் பதிவு.

Kaa Sethu

அங்கு அவதானிக்க வேண்டியது:
//
கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்; அதாவது கருக்க வைத்தல்.

வெய்யிலில் தோல் கருத்தது
வெய்யிலால் தோல் கறுத்தது

இருத்தல் = தானாக ஓரிடத்தில் அமர்தல்
இறுத்தல் = பிறவினையால் ஓரிடத்தில் இருக்க வைத்தல்.

நாளாவட்டத்தில், கருத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கருப்பிற்கும், கறுத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கறுப்பிற்கும் பொருள் மயக்கம் ஏற்படலாம்; பலருக்கும் ஏற்படுகிறது. கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் சரி செய்துவிடலாம். அதேபோலத் தான் இருப்பும், இறுப்பும். இன்னும் பல காட்டுக்களைச் சொல்ல முடியும்.
//

Kaa Sethu உளுந்து–>உழுந்து, பவழம்–>பவளம் ஆகியவற்றிற்க்கு அவ்வாற்றான வேர் அலசல்கள் தேவை
Kaa Sethu உளுந்து / உழுந்து இரண்டில் ஒன்று வழா1 மற்றது வழுவமைதி எனத்தான் கொள்ளவேண்டியிருக்கும். ஆனால் தமிழிற்குப் பதில் தமிள் என எழுதுவது ஏற்க்கொள்ளவியலாதது.
நிரூஜா மா இது பரவாயில்லை; ஞாபகத்துக்கு நியாபகம் என்று எழுதுவது தற்சம/தற்பவ விட்யமோ? ஞாபகம் வடமொழியில் இருந்து வந்த சொல்லா?
Leave a Comment :, , , , , more...

தமிழ் அகராதி விரைவில் தூசுதட்டப்பட வேண்டும்

by on Jan.12, 2012, under தமிழ்

“சாதி என்ற சொல்லை தமிழ்ச் சொல்லகராதியில் இருந்து தூக்குவதற்கு முன்னர் கற்பு என்ற சொல்லைத் தூக்க வேன்டும்.”

இது சில நாற்களுக்கு முன் நான் பேஸ்புக்கில் இடுகையாக இட்டு பின்னர் இது பல கோணங்களில் இழுத்து நீட்டி முழக்கப்பட்ட ஒரு விடயம். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இருந்தாலும் இது பற்றி இன்னும் கொஞ்சம் என் மனதில் இருப்பவற்றைப் பகிந்து கொள்வதற்காகவே இந்தப் பதிவு.

நம் தமிழ்ச் சமுதாயம், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று போற்றிப் புகழ்ந்து கொண்டு எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாகரீகத்தில் பழம்பெரும் வரலாறு கொண்டவர் நாம்; சோழ, சேர, பாண்டிய, பல்லவ அரசுக்களால் காலங்காலமாக செழுமையுற்றது எம் இனம்; உலகின் தொன் மொழிகளுள் ஒன்று எம் தமிழ் மொழி என்றும் அதுவே செம்மொழி என்றும், இதற்கு அக்காலத்தில் முதல், இடை, கடை முதலாக சங்கங்கள் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் போற்றுகின்றோம்.

இவை எல்லாம் உண்மையாக இருக்கலாம். அதற்கு பல சான்றுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை எல்லாம் எம் பழம் பெரும் சமூகத்தின் இறந்த காலம். இப்போது எம் பழம்பெருந் தமிழினத்தின் நிலை தான் உலகம் அறிந்ததே. நாமெல்லாம் நாகரீகம் உடையவர்களாகத் தான் நடந்து கொள்கிறோமா? சாதாரண வீதி ஒழுங்கைப் பின்பற்றுவதில் இருந்து, சாப்பிட்டுவிட்டு மிச்சம் மீதியைப் போடுவது வரைக்கும் வெறும் விலங்குகளாகத் தானே நம் இனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

இதற்கும் மேலாக, தேவை இல்லாத சாதி, வர்ணம் என்று எத்தனையோ பாகுபாடுகள்; பிரிவினைகள். சாதியம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ஒரு சாரார் கூவிக்கொண்டு திரிகின்றார்கள். இன்னொரு பக்கம் சாதியத்தின் அடிப்படையில் தான் கல்லூரிகளிலே இட ஒதுக்கீடே கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சாதி எம் சமூகத்தில் ஒட்டுண்டே வந்திருக்கின்றது. இதனால் நற்பேறு பெற்றோர் ஒருபுறம் இருக்க, வாழ்விழந்தோர் ஏராளம் ஏராள்ம்.

மறுபுறம், கற்பு என்பது என் சமூகத்தில் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்று என்னால் இன்று வரை புரிந்து கொள்ள முடியவே இல்லை.

  • கற்பு பெண்களுக்குரிய உயரிய ஒழுக்கம் என்கிறார்கள் ஓரிடத்தில்
  • கற்பு மனிதனுக்குரியது; ஆண், பெண் இருபாலாருக்கும் பொருதும் என்கிறார்கள் இன்னோரிடத்தில்
  • திருமணம் வரை எதிர்ப்பாலரை (?) மனதளவில் நினையாமை தான் கற்பு என்கிறார்கள் பிறிதோரிடத்தில் [பின்னர் கட்டியவனை/ளை மாத்திரம் நினைக்க வேண்டும்]
  • கற்பு பெண்ணுக்கு மட்டுமே என கூறுபவர்களும் திருமணத்துக்கு முதல் அவளது கன்னித்திரை கிழியாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் [47% பெண்களின் (பாலியல் தொழில் செய்யும் பெண்கள் உட்பட)  கன்னித்திரைக்கு நெகுழும் தன்மை உள்ளதாம், அது எப்போதும் கிழிவதில்லையாம். ஆய்வொன்று கூறுகிறது. 11% பெண்களுக்கு மிக மெல்லிய தடிமன் உள்ள கன்னித்திரையுடன் பிறக்கிறார்கள் இவர்கள் உடற்பயிற்சி செய்யும் போதோ, சைக்கிள் போன்ற வாகனங்களில் இருப்பதற்கு காலைத் தூக்கும் போது இது கிழிந்துவிடும். தவிர தற்காலதில் செயற்கையாக கூட கன்னித் திரையைப் பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்]
  • திருமணத்துக்கு முன்னர் சுய இன்பத்தில் ஈடுபடாமை யிலிருந்து உடலுறவு கொள்ளாமை வரைக்கும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் சிலர்.

இப்படி என் தமிழ்ச்சமூகம் கற்புக்கு விதித்து வைத்திருக்கும் வரைவிலக்கணங்கல் எண்ணில் அடங்காதவை. எனக்கு இப்படிப்பட்ட கற்பில் நம்பிக்கை இல்லை. கற்பு மனது சம்பந்தப்பட்டது.

“ஒரு பெண்ணோ ஆணோ, தன்னை நம்பி வந்தவரிடம் இதுவரை இப்படியெல்லாம் நடந்திருக்கிறேன். இது தான் நான் என்று கூறி இருவரும் ஒத்துப்போதல் தான் கற்பு”

தமிழ், கலாச்சாரம், பண்பாடு என்று வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. “Virginity is not a matter of dignity but a lack of opportunity” இது தான் இன்றைய சமூகத்தின் யதார்த்தம். உண்மை. அதற்காக, நாமும் ஆடுமாடுகள் போல் யாருடனேனும் வேண்டும் போதெல்லாம் புணர்ந்து கொண்டு திரியவேண்டுமா என்று கேட்காதீர்கள். ஆனால், இன்றைய வாலிபர்களுக்கு 13 வயதிலேயே பால் சார்ந்த உணர்வுகள் உருவாகிவிடுகின்றன. சிலருக்கு அதற்கு முன்பே. அவர்களுடைய ஓமோன்களையும்(Hormone) கற்பனைகளையும் தூண்டப்படுகின்ற சந்தர்ப்பங்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுய இன்பம் அனுபவிப்பார்கள். இது காலத்தின் தேவை.

ஆக, பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டு எம்முன்னே பயன்படுத்தப்படும் கற்புக்கு எதற்காக அகராதியில் ஓர் இடம்.

1 Comment :, , , , , , , more...

வந்தவர்கள்

free counters