செவ்வானச் சிதறல்கள்…

கணணி

டொம்கட்டின்(Tomcat) கொலைவெறி

by on Jan.25, 2012, under கணணி, ஜாவா

மென்பொருள் துறையில் பல வகையான வழங்கிகள் (servers) உள்ளன. அவை ப்ல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, அவை கிடைக்கும் தன்மையைக் கொண்டு JBoss, Apache, Jetty, Tomcat, Glassfish போன்ற கட்டற்ற, திறந்த மூல, இலவச வழங்கிகளாகவும் இருக்க, Websphere, Weblogic, மற்றும் மைக்றோசொஃப்டின் IIS வழங்கி போன்றன மூடிய மூல மற்றும் அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வழங்கிகளாகவும் இருக்கின்றன. இவை தவிர இன்னும் பல இங்கே குறிப்பிடாத வழங்கிகளும் பயன்பாட்டில் உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்க விடயம்.

 மேலே குறிப்ப்டிட்ட வழங்கிகளில் IIS மற்றும் Apache தவிர மற்றையவை அனைதும் ஜாவா கணனி மொழி சார்ந்த நிரல்கலை பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகளையே இவற்றில் இயக்க முடியும்.

சரி, இனி விசயத்துக்கு வருவோம். பொதுவாக JSP பங்களைக் கொண்டு உருவாக்கப்படும் செயலியின் வெளிச் செயற்பாடுகள் (functionalities) வழங்கியில் ஜாவா நிரல்களாக மாற்றப்பட்டு, பின்னர் .java கோப்புகளாக மாற்றம் பெற்று பின்னரே அவை இயந்திர மொழியாக மாற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் போது, டொம்கட் (tomcat), work எனும் ஒரு கோப்பத்தை (folder/directory) உருவாக்கி, அதற்குள்ளேயே அந்த தற்காலிக, .JAVA கோப்புகளைச் சேமிக்கும்.

சில வேளைகளில், நாம் உண்மையான .jsp கோப்புகளில் மாற்றங்கள் செய்தாலும், அந்த மாற்றாத்தை வழங்கி கண்டு பிடிக்காமல், குறித்த கோப்பு இன்னமும் மாற்றப்படவில்லை என நினைத்து, ஏற்கனவே குறித்த .jsp கோப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த .java கோப்பையே மொழிமாற்றி (compile) இயக்க முற்படும். இதன்போது, குறித்த work என்ற கோப்பகத்தை அழித்து விட்டால், மறுபடியும் அந்த கோப்பகத்தை உருவாக்கி எல்லா .jsp கோப்புகளையும் .java கோப்புகளாக மாற்றி பின்னர் பைனரியாக மாற்றும்.

கடந்த வாரம், நான் தற்போது வேலைசெய்யும் ஜாவா சார்ந்த ஒரு செயலியை வழங்கியில் இட்டு, வழங்கியை இயக்க முற்பட்ட போது கீழே உள்ள வழு தோன்றியது. இதன் காரணம் எனக்கு தெரியவில்லை.

SEVERE: Exception loading sessions from persistent storage

என்ற வரியைப் பார்த்தால்,  இது ஏதோ தகவற்தளம் (database) உடன் தொடர்புடைய பிரச்சனை போல் என்று எண்ணி அதன் மீது கவனம் செலுத்த தொடங்கி விட வாய்ப்புண்டு.

INFO: Initializing Coyote HTTP/1.1 on http-9090

Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.startup.Catalina load
INFO: Initialization processed in 550 ms
Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.core.StandardService start
INFO: Starting service Catalina
Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.core.StandardEngine start
INFO: Starting Servlet Engine: Apache Tomcat/6.0.33
Jan 18, 2012 10:52:14 AM org.apache.catalina.session.StandardManager doLoad
SEVERE: IOException while loading persisted sessions: java.io.EOFException
java.io.EOFException
at java.io.ObjectInputStream$PeekInputStream.readFully(ObjectInputStream.java:2281)
at java.io.ObjectInputStream$BlockDataInputStream.readShort(ObjectInputStream.java:2750)
at java.io.ObjectInputStream.readStreamHeader(ObjectInputStream.java:780)
at java.io.ObjectInputStream.<init>(ObjectInputStream.java:280)
at org.apache.catalina.util.CustomObjectInputStream.<init>(CustomObjectInputStream.java:58)
at org.apache.catalina.session.StandardManager.doLoad(StandardManager.java:362)
at org.apache.catalina.session.StandardManager.load(StandardManager.java:321)
at org.apache.catalina.session.StandardManager.start(StandardManager.java:648)
at org.apache.catalina.core.ContainerBase.setManager(ContainerBase.java:446)
at org.apache.catalina.core.StandardContext.start(StandardContext.java:4631)
at org.apache.catalina.core.ContainerBase.start(ContainerBase.java:1057)
at org.apache.catalina.core.StandardHost.start(StandardHost.java:840)
at org.apache.catalina.core.ContainerBase.start(ContainerBase.java:1057)
at org.apache.catalina.core.StandardEngine.start(StandardEngine.java:463)
at org.apache.catalina.core.StandardService.start(StandardService.java:525)
at org.apache.catalina.core.StandardServer.start(StandardServer.java:754)
at org.apache.catalina.startup.Catalina.start(Catalina.java:595)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke0(Native Method)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke(NativeMethodAccessorImpl.java:39)
at sun.reflect.DelegatingMethodAccessorImpl.invoke(DelegatingMethodAccessorImpl.java:25)
at java.lang.reflect.Method.invoke(Method.java:597)
at org.apache.catalina.startup.Bootstrap.start(Bootstrap.java:289)
at org.apache.catalina.startup.Bootstrap.main(Bootstrap.java:414)
Jan 18, 2012 10:52:14 AM org.apache.catalina.session.StandardManager start
SEVERE: Exception loading sessions from persistent storage

 

ஆனால் நான் முன்னர் கூறியது போல work என்ற கோப்பகத்தை அழித்து விட்டு வழங்கியை மீண்டும் இயக்கியவுடன் குறித்த அந்த வழு இல்லாமல் போய்விட்டது.  இதற்கு உண்மையான காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்படியான வழு வருவது இதுவே முதன்முறை. அதன் போது நான் செய்த்த நடவைக்கையை இங்கே பகிர்ந்துள்ளேன்.

3 Comments :, , , , , , , , , , more...

கடைசியா புடுங்கிய ஆணி – Tamil(Unicode) Characters in Java basedweb application [5.1.2011]

by on Jan.06, 2011, under ஒருங்குறி, கணணி, ஜாவா

கடந்த சில வாரங்களாக எனக்கு இருந்த மிகப் பெரிய ஆணியை ஒருமாதிரி இன்று புடுங்கியாகிவிட்டது. நான் இப்ப வேலை செய்யிறது ஒரு பன்மொழிப் பயன்பாடு உள்ள ஒரு web application. தற்போது ஆங்கிலம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகியன பயன்படுத்தப்பட்டாலும், இதில கிட்டத்தட்ட 5க்கு மேற்பட்ட இந்திய மொழிகளைக் கொண்டு தரவு உள்ளீடு செய்ய வேண்டி இருக்கும்.

ஆக தரவு எல்லாமே ஒருங்குறியில தான் உள்ளீடு செய்ய வேணும். எங்கட application முழுக்க முழுக்க java வில தான் எழுதினது. Struts, Hibernate மற்றும் Spring ஆகிய framework பயன்படுத்தப்பட்டுள்ளது. database ஆக mysql5.1 பாவிக்கிறம். இந்த database  உருவாக்கேக்க character set = utf8 உம் collate = utf8_generic கும் பயன்படுத்தியிருக்கிறம். இதே போல தான் table உருவாக்கேக்க எல்லாம் மறக்காம utf8 பாவிச்சனாங்கள்.  தவிர database connection pooling க்காக proxool என்டிர API யும் பாவிக்கிறம். அதிலயும் connection settings எல்லாம் சரியாதான் இருந்திச்சு.

<driver-url>jdbc:mysql://localhost:3306/mboxx?useUnicode=true&amp;characterEncoding=UTF-8</driver-url>
<driver-class>com.mysql.jdbc.Driver</driver-class>
<driver-url>jdbc:mysql://localhost:3306/mboxx?useUnicode=true&amp;characterEncoding=UTF-8</driver-url> <driver-class>com.mysql.jdbc.Driver</driver-class>
மேல இருக்கிற மாதிரி தான் proxool connection string குடுத்தனான். பிறகு form ஒண்டு உருவாக்கேக, jsp page ல meta tag க்கும் ஒழுங்கா தான் குடுத்திருந்தனான்.
<%@ page contentType=”text/html;charset=UTF-8″ import=”java.util.*” language=”java” pageEncoding=”UTF-8″ %>
மற்றும்
<meta http-equiv=”Content-type” content=”text/html; charset=utf-8″/>
முதலாவதா இருக்கிற வரியை [jst tag], jsp page இன்டை தொடக்கத்திலையும், அடுத்த வரியை html page இன்டை head tag க்கு உள்ளையும் எழுதி இருந்தனான். அது மட்டுமில்ல, servlet ல வாற request object ஐ பயன்படுத்த முதல் அதுக்கும் request.setCharacterEncoding(“UTF-8″); என்ட encoding எல்லாம் குடுத்தனான். ஆனா பாருங்கோ, web page ல தமிழ்ழை தட்டி சேமிக்க போனா, à®®à®¾à®²à®µà®©à¯ இப்பிடி தான் கோழி கோழி முட்டை முட்டையா எழுத்துக்கள் வந்திச்சு. இதுவே நேரா database client ஐ பயன்படுத்தி, database ல தமிழில தட்டீட்டு web application ஐ பாவிச்சு பாத்தா அது சரியா தமிழில தெரிஞ்சிச்சு.  என்னடா இது வில்லங்கம் பிடிச்ச ஆணியா கிடக்கு எண்டு கூகுல் சாமிய போட்டு உலுப்புலுப்பெண்டு 3 கிழமையா உலுப்பியும் ஒண்டும் கொட்டுண்டேல்ல. ஒரு கட்டத்தில இதுக்கு வேற வழி எதாவது இருக்கா எண்டு பாத்து தற்காலிகமா ஒரு தீர்வு குடுத்துட்டு மற்ற ஆணிகளைப்பாக்க போட்டன்.
பெரிசா ஒரு தீருவும் சொல்லேல்ல.  http://www.mikezilla.com/exp0012.html இந்த மாற்றிய பாவிச்சு, இதில மேல் பெட்டில தமிழில தட்டீட்டு பக்கத்தில இருக்கிற பொத்தான அமத்தினா, தட்டின எழுத்துக்களுக்கான ஒருங்குறி எழுத்துகளை தரும். உதாரணத்துக்கு, நிரூஜா என்ட பெயரை முதல் பெட்டியில தட்டீட்டு மாற்றியை பாவிச்சா, அதுக்கு சமமான  &#2984;&#3007;&#2992;&#3010;&#2972;&#3006; எண்ட ஒருங்குறி மதிப்புக்களை தரும். இத web application இல உள்ளிட்டா எல்லாம் சட்டபடி வந்திச்சு.
ஆனா, இது ஒரு தீர்வில்ல என்டு தெரிஞ்சாலும், வேற ஆணிகள் இருந்ததால இத அப்பிடியே விட்டுட்டன். இண்டைக்கு ஒரு வழி பண்ணிறதெண்டு, மறுபடியும் தூசு தட்டி பாக்கேக்க தான் ஒரு வழிய கண்டு பிடிச்சன். Spring  பயன்படுத்தேக்க, spring framework க்கிண்ட character encoding filters ஐ பாவிக்கலாம் எண்டு விளங்கிச்சு. web.xml கோப்பில கீழ இருக்கிற coding ஐ போட்டா எல்லாம் சரியாகிடும்.
<filter>
<filter-name>encodingFilter</filter-name>
<filter-class>org.springframework.web.filter.CharacterEncodingFilter</filter-class>
<init-param>
<param-name>encoding</param-name>
<param-value>UTF-8</param-value>
</init-param>
<init-param>
<param-name>forceEncoding</param-name>
<param-value>true</param-value>
</init-param>
</filter>
<filter-mapping>
<filter-name>encodingFilter</filter-name>
<url-pattern>/*</url-pattern>
</filter-mapping>
இப்பிடி ஒரு வழியா வேலைசெய்ய வச்சாச்சு. இப்ப, request.characterEncoding, எல்லாம் தேவையில்லை. எல்லாம் சரியா வேலைசெய்யுது. ;)
12 Comments :, , , , , , , , , , more...

விண்டோஸின் அடுத்த இயங்குதளம் (Windows 8)

by on Nov.24, 2009, under கணணி

நீங்கள் தற்போது விண்டோஸ் 7 பாவனையாளரா அல்லது அதனை பயன்படுத்துவது பற்றி ஆலோசித்துக்கொண்டிருக்கின்றீர்களா? அப்படியென்றால் இந்த பதிவு உங்களுக்காகத் தான். விண்டோஸின் அடுத்த் இயங்கு தள் வெளியீடாக விண்டோஸ் 8 வருகின்ற 2012ல் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. இது ஒண்டும் ஆச்சரியம் தருகின்ற விடயம் இல்லைத் தான்.

வழக்கமான திட்டமிடல்களுடன் கூடிய வேலைப்பாடாக நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேலைகளின் படி, விண்டோஸ் நிறுவனம் தனது அடுத்த முக்கியமான வெளியீடாக விண்டோஸ் 8 வெளியிடப்பட இருக்கின்றது.

Leave a Comment more...

அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?

by on Sep.12, 2009, under கணணி


அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?”

நியாயமான ஒரு கேள்வி

“ஏம்பா இந்த கம்ப்யூட்டர் படிச்சவங்க எல்லாம் நிறைய சம்பளம்
வாங்கிட்டு, பந்தா பண்ணிட்டு ஒரு தினுசாவே அலையுறீங்களே? அப்படி என்னதான் வேலை பார்ப்பீங்க ?” –

நியாயமான ஒரு கேள்வியை கேட்டார் எனது அப்பா.

நானும் விவரிக்க ஆரம்பிதேன்.

“வெள்ளைகாரனுக்கு எல்லா வேலையும் சீக்கிரமா முடியனும்.
அதே மாதிரி எல்லா வேலையும் அவனோட வீட்டுல
இருந்தே செய்யணும்.
இதுக்காக எவ்வளவு பணம் வேணுமானாலும் செலவு செய்ய
தயாரா இருக்கான்.”

“அது சரி பல்லு இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்”.

“இந்த மாதிரி அமெரிக்கால்-ல, இங்கிலாந்து-ல இருக்குற Bank,
இல்ல எதாவது கம்பெனி, “நான் செலவு செய்ய தயாரா இருக்கேன்.
எனக்கு இத செய்து கொடுங்க கேப்பாங்க.
இவங்கள நாங்க “Client”னு சொல்லுவோம்.

“சரி”

இந்த மாதிரி Client-அ மோப்பம் பிடிக்குறதுக்காகவே எங்க
பங்காளிக கொஞ்ச பேர அந்த அந்த ஊருல உக்கார வச்சி இருப்போம். இவங்க பேரு “Sales Consultants, Pre-Sales Consultants….”.

இவங்க போய் Client கிட்ட பேச்சுவார்த்தை நடத்துவாங்க.

காசு கொடுகுறவன் சும்மாவா கொடுப்பான்?

ஆயிரத்தெட்டு கேள்வி கேப்பான். உங்களால இத பண்ண முடியுமா?

அத பண்ண முடியுமான்னு அவங்க கேக்குற எல்லாம் கேள்விக்கும், “முடியும்”னு பதில் சொல்றது இவங்க வேலை.

“இவங்க எல்லாம் என்னப்பா படிச்சுருபாங்க”?

“MBA, MSனு பெரிய பெரிய படிபெல்லாம் படிச்சி இருப்பாங்க.”

“முடியும்னு ஒரே வார்த்தைய திரும்ப திரும்ப சொல்றதுக்கு
எதுக்கு MBA படிக்கணும்?” –

அப்பாவின் கேள்வியில் நியாயம் இருந்தது.

“சரி இவங்க போய் பேசின உடனே client project கொடுத்துடுவானா?”

“அது எப்படி? இந்த மாதிரி பங்காளிக எல்லா கம்பெனிளையும்
இருப்பாங்க. 500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 60 நாள்ள
முடிச்சு தரோம், 50 நாள்ல முடிச்சு தரோம்னு பேரம் பேசுவாங்க.
இதுல யாரு குறைஞ்ச நாள சொல்றாங்களோ அவங்களுக்கு
ப்ராஜெக்ட் கிடைக்கும்”

“500 நாள்ல முடிக்க வேண்டிய வேலைய 50
நாள்ல எப்படி முடிக்க முடியும்? ராத்திரி பகலா வேலை பார்த்தாலும்
முடிக்க முடியாதே?”

“இங்க தான் நம்ம புத்திசாலித்தனத்த நீங்க
புரிஞ்சிக்கணும். 50 நாள்னு சொன்ன உடனே client சரின்னு சொல்லிடுவான்.

ஆனா அந்த 50 நாள்ல அவனுக்கு என்ன வேணும்னு அவனுக்கும்
தெரியாது, என்ன செய்யனும்னு நமக்கும் தெரியாது.
இருந்தாலும் 50 நாள் முடிஞ்ச பிறகு ப்ரோஜெக்ட்னு ஒன்ன நாங்க deliver பண்ணுவோம்.
அத பாத்துட்டு “ஐய்யோ நாங்க கேட்டது இதுல்ல,
எங்களுக்கு இது வேணும், அது வேணும்னு” புலம்ப ஆரம்பிப்பான்.

“அப்புறம்?” – அப்பா ஆர்வமானார்.

“இப்போ தான் நாங்க நம்பியார் மாதிரி கைய பிசஞ்சிகிட்டே
“இதுக்கு நாங்க CR raise பண்ணுவோம்”னு சொல்லுவோம்.

“CR-னா?”

“Change Request. இது வரைக்கும் நீ கொடுத்த பணத்துக்கு நாங்க
வேலை பார்த்துட்டோம்.
இனிமேல் எதாவது பண்ணனும்னா எக்ஸ்ட்ரா பணம் கொடுக்கணும்”னு
சொல்லுவோம்.
இப்படியே 50 நாள் வேலைய 500 நாள் ஆக்கிடுவோம்.”

அப்பாவின் முகத்தில் லேசான பயம் தெரிந்தது.

“இதுக்கு அவன் ஒத்துபானா?”

“ஒத்துகிட்டு தான் ஆகணும்.

முடி வெட்ட போய்ட்டு, பாதி வெட்டிட்டு வர முடியுமா?”

“சரி ப்ராஜெக்ட் உங்க கைல வந்த உடனே என்ன பண்ணுவீங்க?”

“முதல்ல ஒரு டீம் உருவாக்குவோம்.
இதுல ப்ராஜக்ட் மேனேஜர்னு ஒருத்தர் இருப்பாரு.
இவரது தான் பெரிய தலை.
ப்ராஜெக்ட் சக்சஸ் ஆனாலும், ஃபெயிலியர் ஆனாலும் இவரு தான் பொறுப்பு.”

“அப்போ இவருக்கு நீங்க எல்லாரும் பண்ற வேலை எல்லாம்
தெரியும்னு சொல்லு.”

“அதான் கிடையாது.

இவருக்கு நாங்க பண்ற எதுவும்யே தெரியாது.”

“அப்போ இவருக்கு என்னதான் வேலை?” –

அப்பா குழம்பினார்.

“நாங்க என்ன தப்பு பண்ணினாலும் இவர பார்த்து கைய நீட்டுவோம். எப்போ எவன் குழி பறிப்பானு டென்ஷன் ஆகி டயர்ட் ஆகி டென்ஷன்
ஆகுறது தான் இவரு வேலை.”

“பாவம்பா”

“ஆனா இவரு ரொம்ப நல்லவரு.
எங்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும் இவரு கிட்ட போய் சொல்லலாம்.”

“எல்லா பிரச்னையும் தீர்த்து வச்சிடுவார?”

“ஒரு பிரச்சனைய கூட தீர்க்க மாட்டாரு.
நாங்க என்ன சொன்னாலும் தலையாட்டிகிட்டே உன்னோட பிரச்னை
எனக்கு புரியுதுனு சொல்றது மட்டும் தான் இவரோட வேலை.”

“நான் உன்னோட அம்மா கிட்ட பண்றத மாதிரி?!”

“இவருக்கு கீழ டெக் லீட், மோடுல் லீட், டெவலப்பர், டெஸ்டர்னு
நிறைய அடி பொடிங்க இருப்பாங்க.”

“இத்தனை பேரு இருந்து, எல்லாரும் ஒழுங்கா வேலை செஞ்சா
வேலை ஈஸியா முடிஞ்சிடுமே?”

“வேலை செஞ்சா தானே?
நான் கடைசியா சொன்னேன் பாருங்க…
டெவலப்பர், டெஸ்டர்னு, அவங்க மட்டும் தான் எல்லா வேலையும் செய்வாங்க. அதுலையும் இந்த டெவலப்பர்,வேலைக்கு சேரும் போதே “இந்த குடும்பத்தோட மானம், மரியாதை உன்கிட்ட தான் இருக்குனு”
சொல்லி, நெத்தில திருநீறு பூசி அனுப்பி வச்ச என்னைய மாதிரி
தமிழ் பசங்க தான் அதிகம் இருப்பாங்க.”

“அந்த டெஸ்டர்னு எதோ சொன்னியே?
அவங்களுக்கு என்னப்பா வேலை?”

“இந்த டெவலப்பர் பண்ற வேலைல குறை கண்டு பிடிக்கறது
இவனோட வேலை.

புடிக்காத மருமக கை பட்டா குத்தம்,
கால் பட்டா குத்தம் இங்குறது மாதிரி.”

“ஒருத்தன் பண்ற வேலைல குறை கண்டு பிடிகுறதுக்கு சம்பளமா?
புதுசா தான் இருக்கு. சரி இவங்களாவது வேலை செய்யுராங்களா.
சொன்ன தேதிக்கு வேலைய முடிச்சு கொடுத்துடுவீங்கள்ள?”

“அது எப்படி..? சொன்ன தேதிக்கு ப்ராஜக்டை முடிச்சி கொடுத்தா,
அந்தக் குற்ற உணர்ச்சி எங்க வாழ்கை முழுவதும் உறுத்திக்கிட்டு
இருக்கும். நிறைய பேரு அந்த அவமானத்துக்கு பதிலா தற்கொலை
செய்துக்கலாம்னு சொல்லுவாங்க”

“கிளையன்ட் சும்மாவா விடுவான்?

ஏன் லேட்னு கேள்வி கேக்க மாட்டான்?”

“கேக்கத்தான் செய்வான். இது வரைக்கும் டிமுக்குள்ளையே
காலை வாரி விட்டுக்கிட்டு இருந்த நாங்க எல்லாரும் சேர்ந்து அவன் காலை வார ஆரம்பிப்போம்.”

“எப்படி?”

“நீ கொடுத்த கம்ப்யூட்டர்-ல ஒரே தூசியா இருந்துச்சு.
அன்னைக்கு டீம் மீட்டிங்ல வச்சி நீ இருமின,
உன்னோட ஹேர் ஸ்டைல் எனக்கு புடிகலை.”
இப்படி எதாவது சொல்லி அவன குழப்புவோம்.
அவனும் சரி சனியன எடுத்து தோள்ல போட்டாச்சு,
இன்னும் கொஞ்ச நாள் தூங்கிட்டு போகட்டும்னு விட்டுருவான்”.

“சரி முன்ன பின்ன ஆனாலும் முடிச்சி கொடுத்துட்டு கைய
கழுவிட்டு வந்துடுவீங்க அப்படித்தான?”

“அப்படி பண்ணினா, நம்ம நாட்டுல பாதி பேரு வேலை இல்லாம
தான் இருக்கணும்.”

“அப்புறம்?”

“ப்ராஜக்டை முடிய போற சமயத்துல நாங்க எதோ பயங்கரமான
ஒன்ன பண்ணி இருக்குறமாதிரியும், அவனால அத புரிஞ்சிக்க
கூட முடியாதுங்கற மாதிரியும் நடிக்க ஆரம்பிப்போம்.”

“அப்புறம்?”

“அவனே பயந்து போய்,
“எங்கள தனியா விட்டுடாதீங்க. உங்க டீம்-ல ஒரு ஒன்னு, ரெண்டு
பேர உங்க ப்ரொஜெக்ட பார்த்துக்க சொல்லுங்கன்னு”

புது பொண்ணு மாதிரி புலம்ப ஆரம்பிச்சிடுவாங்க.”
இதுக்கு பேரு “Maintenance and Support”.
இந்த வேலை வருஷ கணக்கா போகும்.
“ப்ராஜக்ட் அப்படிங்கறது ஒரு பொண்ண கல்யாணம் பண்ணி வீட்டுக்கு
கூட்டிட்டு வர்றது மாதிரி.

தாலி கட்டினா மட்டும் போதாது, வருஷ கணக்கா நிறைய செலவு செஞ்சு பராமரிக்க வேண்டிய விசயம்னு” இப்போ தான் கிளைன்டுக்கு
புரிய ஆரம்பிக்கும்.

“எனக்கும் எல்லாம் புரிஞ்சிடுப்பா.”

குறிப்பு: இதை எழுதியது  சத்தியமாக  நானில்லை. இது எனக்கு  மின்னஞ்சலில் வந்தது. சுவாரசியமாக இருந்ததால் பகிர்ந்து கொள்கின்றேன்.

3 Comments :, more...

Kaspersky காலாவதி ஆவதை தடுப்பது எப்படி

by on Jun.17, 2009, under கணணி, வைரஸ்

Kaspersky தனது வாடிக்கையாளர்களை 30 நாட்கள் இலவசமாக பரீட்சித்துப்பார்க்க விட்டுள்ளது,
இந்த 30 நாட்களும் Kaspersky ஆனது காசு கொடுத்து வாங்குவதை போலவே இயங்கும்,

இந்த முயற்சியின் மூலம் கிடைத்த விடை, நாம் அந்த பரீட்சாத்த மென்பொருளை (Trial), எவளவு நாட்கள் வேண்டுமெண்றாலும்
பாவிக்கலாம் :)

இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது 29 நாட்களுக்கு ஒருமுறை தல 1 நிமிடம் வரை செலவு செய்ய வேண்டும்

செய்முறை

*kaspersky இன் எந்த மென்பொருளயும் நீங்கள் வைத்திருக்கலாம், (Kaspersky IS, Kaspersky AV)

1. நீங்கள் பழய அனுமதி வைத்திருந்தால் (KEY FILE) அதை அழித்துவிடுங்கள்
2. Kaspersky ஐ open செய்து Enable Self-Defense ஐ Un-tick செய்யவும்.

Enable Self-Defense ஐ Un-tick செய்யும் முறை

1. Open the kaspersky
2. Go to “Settings” on the right hant top corner
3. you will prompt a box
4. in the box click the “option Button”
5. u can see in the right hand side ” Enable Self-Defens”
6. un-tick that

3. பின்னர் kaspersky ஐ exit செய்யவும்

Kaspersky Trial Resetter v1.8.0.0 Final REZMAN1984
4. kaspersky Trial Resetter v1.8.0 ஐ தள இறக்கம் செய்து உங்கள் கணனியின் முகதிரையில் வைத்துக்கொள்ளவும் (SAVE ON DESKTOP)
5. extract the file (password : kaspersky)
6. in the folder u can find kaspersky resetter.exe
7. run it
8. press “start”

9. ஒரு 30 நொடி (sec) பொறுங்கள்….. உங்களது Kaspersky மறுபடியும் செயற்பட்டு உங்களிடம் Activate செய்ய கேட்கும்…
அப்பொளுது “Activate Trial vertion” என்பதை அளுத்துங்கள்….

உங்களது மென்பொருள் 30 நாட்கள் பாவனக்கு தயாராகுவிடும்…

முக்கிய குறிப்பு :
1. trial resetter ஐ வேலை முடிந்தவுடன் அழித்துவிடவும் (delete the restetter but don’t delete the .rar file)
2. உங்களது Kaspersky trail இல் இயங்குகிறது எண்று சொல்லும்.. அதை நீங்கள் “Hide Message” இல் மறைத்து விடலாம்

29 நாட்களுக்கு ஒருமுறை இதை செய்து கொள்ளவும்…. (29 நாள் தான் என்று கட்டாயம் இல்லை, நீங்கள் விரும்பும் நேரத்திலும்
செய்து கொள்ளலாம்)

இது Windows XP, Vista, 7, என்பவற்றில் பரீட்சித்து பார்க்கப்பட்டது

2 Comments more...

வந்தவர்கள்

free counters