செவ்வானச் சிதறல்கள்…

ஈழம்

இரயில் பயணத்தில் ஓர் கிளிநொச்சி அனுபவம்

by on Dec.15, 2010, under அனுபவங்கள், ஈழம்

இது வரை நான் எழுதிய பதிவுகளில் இது சற்றே வித்தியாசமானது. தற்போது 15ம் திகதி, மார்கழி மாதம் 2010, அதிகாலை 2:42. கொழும்பிலிருந்து வவுனியா மற்றும் தாண்டிக்குளம் நோக்கிச் செல்லும் இரவுத் தபால் தொடரூர்ந்தில் மூன்றாம் வகுப்பு இருக்கை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைச் சூழ சுமார் பத்து பயணிகள் இருக்கின்றார்கள். இவர்களுள் இரு முதியவர்கள் தனித் தனியே வந்தவர்கள். ஐந்து பெண்களும் ஒரு ஆண்ணுமாக இன்னொரு அறுவர் கொண்ட குழு தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அறுவரிடமும் நான் பேசியதையே இந்த பதிவில் தரலாம் என இருக்கின்றேன்.
இவர்கள் அனைவரும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கொள்கைக்காய் நடந்த போரிலே பழிவாங்கப்பட்ட வன்னி மக்களின் எச்சங்கள் இவர்கள் என்றால் மிகையாகாது. இன்று தம் வாழ்க்கைப் போருக்கு தயாராக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த அறுவர் குழுவில் இருந்த ஐந்து பெண்களும், கொழும்பில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயிற்ச்சிக்காக வந்தவர்கள்.
TRISTAR APPAREL EXPERT LTD என்ற பெயரில் இயங்கக்கூடிய ஒரு தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தமது கிளை ஒன்றை கிளிநொச்சியில் நிறுவ இருப்பதாகவும், இதற்காக
முன்கூட்டியே தொழிலாளர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் கூறினார்கள். அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, குறித்த ஆடைத்தொழிற்சாலை இரத்மலாணையில் இருக்கின்றது. தற்போது சுமார் 120 கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் இத் தொழிற்சாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்களது பயிற்சியானது இலத்திரனியல் இயந்திரங்களை கையாளுவது சம்பந்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது, இவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தருவதோடு, மாதாந்தம் பயிற்சிக்கால ஊதியமாக ரூ.7000 வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியானது, குறிப்பாக 6 மாதங்கள் வரை நீடிக்கப்படும் என்று கூறினார்கள்.
இதை விட கிளிநொச்சியிலும் இவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிக்கள் வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாது குறித்த தொழிற்சாலைக்காக கிளிநொச்சியில் இட ஒதுக்கீடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், மிக விரைவிலேயே இவர்களுக்கான ஒரு தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு, அதில் எம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.
மேற்கண்ட செய்தியை சிலவேளைகளில் நீங்கள் யாராவது அறிந்திருக்கக்கூடும். ஆனால், நான் தற்போது தான் அதுவும் சம்பந்த பட்டவர்கள் சொல்லுகின்ற போது தான் கேட்க நேர்ந்தது. அடிமேல் அடிவாங்கிய எம் மக்கள், சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட்டு தலையைத் தூக்கி பார்க்க நினைக்கின்ற இவ்வேளை, இது போன்ற நிறுவனங்களின் வருகை வரவேற்கத்தக்க விடயமே. இருப்பினும் இங்கும் நம் மக்களை அடிமைப்படுத்தி, அவர்களது உழைப்பைச் சுறண்டாது இருந்தார்களானால் எம்மக்களும் உய்வதற்கு வழி பிறக்கும்.

4 Comments :, , , , , , , more...

தலைப்பே இல்லாத ஒரு கவிதை

by on Jan.02, 2009, under ஈழம், கவிதைகள்

ஏனோ தெரியவில்லை…!
ஏதாவது எழுதவேண்டும்
போல் இருந்தது.

கண்ணை மூடிச்
சிந்தித்தேன்…!
விண்ணைக் கூர்ந்தும்
சிந்திதேன்…!
என்னைக் கொண்டு
முடியுமான வரை
எண்ணிப்பார்த்தேன்…!

கார் இருட்டில்
ஊசி தேடுவதைப் போல…
நார் உரிக்க
கல்லை எடுத்தது போல…
ஏர் எடுத்த
முடவன் போல…

வார்த்தை வர
மறுத்தே தொலைத்தது…!
காற்றைக்கேட்டேன்
உதவி நில்லென்று…!
பார்த்துச் சிரித்து
ஏளனம் செய்தது…!

எங்கே போவேன்
வார்த்தை தேடி
எங்கே கிடைக்கும்
நற்றமிழ் பள்ளி
இங்கே வாழ்ந்தால்
இருப்பதும் மறக்கும்

வேண்டும் எனக்கோர்
மணித்திரு நாடு
ஆண்டும் அவையும்
தமிழே செய்யனும்..!
வாண்டும் வாழையும்
தமிழே பாடனும்…!

என்று நிறைவுறும்
நான் காணு சொற்பனம்..???
இன்றே உரைத்திடு
உறுதியாய் உரைத்திடு…!!!

Leave a Comment more...

நாளைய வேள்விகள்

by on Dec.15, 2008, under ஈழம், கவிதைகள்

நாம்…!
நேற்றைய செவ்வயல்களில்
தோற்றிய வீரப்புற்கள்

நாளைய வேள்விக்காய்
இன்றே மரணிக்கும்
தருப்பைப் புற்கள்…!

நாளைய வேள்வியின்
சுதந்திர யோதிக்காய்
இன்றே சாம்பராகும்
தன்மானப் புற்கள்…!

இறுதி வேரின்
உறுதித் துகள்
உள்ளவரை
பல பிறவி எடுத்து
நாளைய வேள்வியின்
நாமுமோர் அங்கமாவோம்…!

Leave a Comment more...

ஓயாது எங்கள் கரம்…

by on Nov.30, 2008, under ஈழம், கவிதைகள்

மருந்தாக நின்றவர்
வெளியேறிச் சென்றாலும்…
மருந்துண்டு எம்மவர்க்கு
மானந்தன்னில்…!

தமிழ் தந்த மூச்சு
நிற்கும் வரை….
தலை கொய்ய
முனைபவர் வேரறுப்போம்…!

கொண்ட கொள்கை
வென்றெடுத்து…
தண்காற்று உண்ணும் வரை
ஓயாது எங்கரங்கள்…!

1 Comment more...

வந்தவர்கள்

free counters