Author Archive
சீனர்களின் அதிஷ்டத்தின் பின்னணி
by nirujah on Jan.26, 2012, under அனுபவங்கள், பொது
நான் பார்த்த அளவில், சீனர்கள் அதிகளவு அதிஷ்டத்தை நம்புகிறவர்களாக இருக்கின்றார்கள். அதில் உள்ள உண்மைத் தன்மை, ஐதீகம் என்பவற்றுக்கு அப்பால், அவை கொஞ்சம் கொஞ்சமாக இந்தியா, இலங்கை வாழுகின்ற மக்களாலும் பின்பற்றப்பட ஆரம்பித்துவிட்டது எனபது ஆச்சரியமான உணமையாகும்.
குறிப்பாக, நம் அநேகரின் வீடுகளிலும் தற்போது பல அளவுகளில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நமது கிருபாநதவாரியா போன்ற உருவம் கொண்ட அதிஷ்டப் பொம்மையைக் கூறலாம். இது தவிர, வீட்டு வாசல்களில் தொங்கவிடப்படக்கூடிய பொருட்கள், அதிஷ்டமான மீன், அதிஷ்டமான தாவரங்கள் என பல வகையான அதிஷ்டப்பொருட்கள் தற்போது விற்பனையில் உண்டு. இவை அனைந்த்தும் சீனாவின் தாக்கத்தால் எம்மிடையே புளக்கத்தில் வந்திருப்பவையே.
இவை தவிர, இன்னும் சில விடயங்களையும் கடந்த சில வாரங்களாக என்னால் பார்க்கக்கூடியதாக இருந்தது. குறிப்பாக, இது சீனர்களுடைய புத்தாண்டுக்காலமாகையால் அவர்களின் அதிஷ்டம் குறித்த நம்பிக்கைகளும் சற்று வித்தியாசமாகவே இருந்தன.

Honey Orange எனப்படும் ஒருவகைத் தோடம்பழங்களை மக்கள் அதிகமாக வாங்கி உரித்துச் சாப்பிட்டார்கள். நம்மூரில் கிடைப்பது போன்ற தோடம்பழங்களே இவை என்றாலும் பெயருக்கு ஏற்றால் போல் இதன் சுவையோ மிகவும் இனிமையாக இருக்கும். இதனை இவர்கள் சீனப்புத்தாண்டு பிறப்பதற்கு முன்னர் வாங்கி அன்பளிப்பாக பிறருக்கு கொடுக்கவும் தாங்களே உண்ணவும் செய்கின்றார்கள். அதிக அளவான தோடம்பழங்களை தாங்கள் உண்பதால் பிறக்கப்போகும் புத்தாண்டானது மிகவும் அதிஷ்டகரமானதாக இருக்கும் என்று இவர்கள் நம்புகின்றார்கள்.

Yusheng அல்லடு ஜீ சங் எனப்படும் ஒரு உணவு வழக்கமாகும். ஜீ சங் என்றால் சமைக்கப்படாத மீன் (raw fish). இதன் போது மீனானது சமைக்கப்படாமல் ஏனைய உணவு வகைகளுடன் சேர்த்து பரிமாறப்படும். சீனப்புத்தாண்டு பிறந்து முதல் 15 நாட்களுக்குள் இம்மாதிரியான மீனை உண்ணும் பழக்கத்தை சீனர்கள் கொண்டிருக்கிறாகள். இதன் மூலமும் தமக்கு அதிஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இந்த மீனோடு சேர்த்து முறுக்கு போன்ற உணவுப்பொருட்கள், பொரிகள், பச்சைக் காய்கறிகள் மற்றும் சுவையூட்டிகள் எல்லாவற்றையும் சேர்த்து இவர்கள் உண்கின்றார்கள்.
டொம்கட்டின்(Tomcat) கொலைவெறி
by nirujah on Jan.25, 2012, under கணணி, ஜாவா
மென்பொருள் துறையில் பல வகையான வழங்கிகள் (servers) உள்ளன. அவை ப்ல்வேறுபட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு பலவாறாகப் பிரிக்கலாம். எடுத்துக்காட்டாக, அவை கிடைக்கும் தன்மையைக் கொண்டு JBoss, Apache, Jetty, Tomcat, Glassfish போன்ற கட்டற்ற, திறந்த மூல, இலவச வழங்கிகளாகவும் இருக்க, Websphere, Weblogic, மற்றும் மைக்றோசொஃப்டின் IIS வழங்கி போன்றன மூடிய மூல மற்றும் அதிக விலைக்கு வாங்கிப் பயன்படுத்தக்கூடிய வழங்கிகளாகவும் இருக்கின்றன. இவை தவிர இன்னும் பல இங்கே குறிப்பிடாத வழங்கிகளும் பயன்பாட்டில் உள்ளதும் இங்கே கவனிக்கத்தக்க விடயம்.
மேலே குறிப்ப்டிட்ட வழங்கிகளில் IIS மற்றும் Apache தவிர மற்றையவை அனைதும் ஜாவா கணனி மொழி சார்ந்த நிரல்கலை பயன்படுத்தி உருவாக்கப்படும் செயலிகளையே இவற்றில் இயக்க முடியும்.
சரி, இனி விசயத்துக்கு வருவோம். பொதுவாக JSP பங்களைக் கொண்டு உருவாக்கப்படும் செயலியின் வெளிச் செயற்பாடுகள் (functionalities) வழங்கியில் ஜாவா நிரல்களாக மாற்றப்பட்டு, பின்னர் .java கோப்புகளாக மாற்றம் பெற்று பின்னரே அவை இயந்திர மொழியாக மாற்றப்பட்டு அதன் செயற்பாடுகள் உருவாக்கப்படுகின்றன. இதன் போது, டொம்கட் (tomcat), work எனும் ஒரு கோப்பத்தை (folder/directory) உருவாக்கி, அதற்குள்ளேயே அந்த தற்காலிக, .JAVA கோப்புகளைச் சேமிக்கும்.
சில வேளைகளில், நாம் உண்மையான .jsp கோப்புகளில் மாற்றங்கள் செய்தாலும், அந்த மாற்றாத்தை வழங்கி கண்டு பிடிக்காமல், குறித்த கோப்பு இன்னமும் மாற்றப்படவில்லை என நினைத்து, ஏற்கனவே குறித்த .jsp கோப்புக்காக உருவாக்கப்பட்டிருந்த .java கோப்பையே மொழிமாற்றி (compile) இயக்க முற்படும். இதன்போது, குறித்த work என்ற கோப்பகத்தை அழித்து விட்டால், மறுபடியும் அந்த கோப்பகத்தை உருவாக்கி எல்லா .jsp கோப்புகளையும் .java கோப்புகளாக மாற்றி பின்னர் பைனரியாக மாற்றும்.
கடந்த வாரம், நான் தற்போது வேலைசெய்யும் ஜாவா சார்ந்த ஒரு செயலியை வழங்கியில் இட்டு, வழங்கியை இயக்க முற்பட்ட போது கீழே உள்ள வழு தோன்றியது. இதன் காரணம் எனக்கு தெரியவில்லை.
SEVERE: Exception loading sessions from persistent storage
என்ற வரியைப் பார்த்தால், இது ஏதோ தகவற்தளம் (database) உடன் தொடர்புடைய பிரச்சனை போல் என்று எண்ணி அதன் மீது கவனம் செலுத்த தொடங்கி விட வாய்ப்புண்டு.
INFO: Initializing Coyote HTTP/1.1 on http-9090
Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.startup.Catalina load
INFO: Initialization processed in 550 ms
Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.core.StandardService start
INFO: Starting service Catalina
Jan 18, 2012 10:52:13 AM org.apache.catalina.core.StandardEngine start
INFO: Starting Servlet Engine: Apache Tomcat/6.0.33
Jan 18, 2012 10:52:14 AM org.apache.catalina.session.StandardManager doLoad
SEVERE: IOException while loading persisted sessions: java.io.EOFException
java.io.EOFException
at java.io.ObjectInputStream$PeekInputStream.readFully(ObjectInputStream.java:2281)
at java.io.ObjectInputStream$BlockDataInputStream.readShort(ObjectInputStream.java:2750)
at java.io.ObjectInputStream.readStreamHeader(ObjectInputStream.java:780)
at java.io.ObjectInputStream.<init>(ObjectInputStream.java:280)
at org.apache.catalina.util.CustomObjectInputStream.<init>(CustomObjectInputStream.java:58)
at org.apache.catalina.session.StandardManager.doLoad(StandardManager.java:362)
at org.apache.catalina.session.StandardManager.load(StandardManager.java:321)
at org.apache.catalina.session.StandardManager.start(StandardManager.java:648)
at org.apache.catalina.core.ContainerBase.setManager(ContainerBase.java:446)
at org.apache.catalina.core.StandardContext.start(StandardContext.java:4631)
at org.apache.catalina.core.ContainerBase.start(ContainerBase.java:1057)
at org.apache.catalina.core.StandardHost.start(StandardHost.java:840)
at org.apache.catalina.core.ContainerBase.start(ContainerBase.java:1057)
at org.apache.catalina.core.StandardEngine.start(StandardEngine.java:463)
at org.apache.catalina.core.StandardService.start(StandardService.java:525)
at org.apache.catalina.core.StandardServer.start(StandardServer.java:754)
at org.apache.catalina.startup.Catalina.start(Catalina.java:595)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke0(Native Method)
at sun.reflect.NativeMethodAccessorImpl.invoke(NativeMethodAccessorImpl.java:39)
at sun.reflect.DelegatingMethodAccessorImpl.invoke(DelegatingMethodAccessorImpl.java:25)
at java.lang.reflect.Method.invoke(Method.java:597)
at org.apache.catalina.startup.Bootstrap.start(Bootstrap.java:289)
at org.apache.catalina.startup.Bootstrap.main(Bootstrap.java:414)
Jan 18, 2012 10:52:14 AM org.apache.catalina.session.StandardManager start
SEVERE: Exception loading sessions from persistent storage
ஆனால் நான் முன்னர் கூறியது போல work என்ற கோப்பகத்தை அழித்து விட்டு வழங்கியை மீண்டும் இயக்கியவுடன் குறித்த அந்த வழு இல்லாமல் போய்விட்டது. இதற்கு உண்மையான காரணம் என்ன என்று எனக்கு தெரியாது. ஆனால் இப்படியான வழு வருவது இதுவே முதன்முறை. அதன் போது நான் செய்த்த நடவைக்கையை இங்கே பகிர்ந்துள்ளேன்.
உழுத்துப்போன உழுந்து/உளுந்து
by nirujah on Jan.16, 2012, under ஈழம், தமிழ்
“அம்மாவின் இனிப்பான சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் இந்தஆண்டு பொங்கலின் மிகப்பெரிய இழப்பு எனக்கு!” என்று இன்று காலை எனது மனதில் இருந்ததை டுவிட்டினேன்.
உண்மையில், இனிப்புப் அதிகம் விரும்பி உண்ணும் எனக்கு, சர்க்கரைப் பொங்கலும், உழுந்து வடையும் என்றால் அலாதிப் பிரியம். இந்த முறை பொங்கலில் ஒரு சிறு கவளம் அரிசி கூட உண்ணக் கிடைக்கவில்லை. சிங்கையின் சிலிர்ப்பில், நூடுல்சும் பாண்ணும் தான் அன்றைய உணவாகப் போனது.
இதற்கிடையில், இந்த டுவிட்டைப் பார்த்த ஒரு தமிழக நண்பி என்ன உளுந்தா?? என்று கேட்க, உழுந்து/உளுந்து சம்பந்தமாக ஓர் தேடலில் இறங்கினேன். தேடுகின்ற போது, வியப்பளிக்கும் வகையில், ழுகரமும் ளுகரமும் சம அளவில் பயன்படுத்தப் பட்டிருந்தது. கூகுளில் எந்தவித வடிகட்டுதலும் இல்லாமல் தேடியபோது கட்டுரைகள் ஆக்கங்கள் பலவற்றில் இரண்டும் பரவலாக பயன்படுத்தப்பட்டிருந்தன. படங்களை மாத்திரம் என்று வடி கட்டியபோது, இரண்டிலும் ஏராளமான படங்கள் வந்தாலும் உழுந்து சார்ந்த படங்கள் மிக மிக அதிகமாக ளுகரம் பயன்படுத்தப்பட்டே வந்திருந்தது.
இவ்விடயமாக பேஸ்புக்கில் நண்பர்களுடன் பின்னர் நடாந்த கருத்தாடலை இங்கே தர விரும்புகின்றேன். அதில் வெறும் உழுந்துடம் மாத்திரம் நின்றுவிடாது மேலும் பல சொற்கள் பற்றியும் கருத்துக்கள் பகிரப்பட்டுள்ளன.
Gopikrishna Kanagalingam http://www.tamilvu.org/
அகல் இலை அகல வீசி, அகலாது
அல்கலும் அலைக்கும் நல்கா வாடை,
பரும யானை அயா உயிர்த்தாஅங்கு //
Gopikrishna Kanagalingam http://ta.wikipedia.org/
இரண்டும் சரி என்றவாறு தமிழ் விக்கி சொல்கிறது
ஆகவே “உளுந்து” என்பதற்கான ஆதாரம் தான் தேவை.
நியாபகம், ஞாபகம் இரண்டும் சரியானவை என்ற முடிவை எடுக்கத் தயாரா?
Kaa Sethu கருப்பு – கறுப்பு பற்றிய இராம.கி. விளக்கங்கள் தெளிவானவை. http://
valavu.blogspot.com
//
கருத்தல் = தானாகக் கருமை நிறம் பெறுதல்;
கறுத்தல் = பிறவினையால் கருமை நிறம் பெறுதல்; அதாவது கருக்க வைத்தல்.
வெய்யிலில் தோல் கருத்தது
வெய்யிலால் தோல் கறுத்தது
இருத்தல் = தானாக ஓரிடத்தில் அமர்தல்
இறுத்தல் = பிறவினையால் ஓரிடத்தில் இருக்க வைத்தல்.
நாளாவட்டத்தில், கருத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கருப்பிற்கும், கறுத்தலில் இருந்து எழுந்த பெயர்ச்சொல்லான கறுப்பிற்கும் பொருள் மயக்கம் ஏற்படலாம்; பலருக்கும் ஏற்படுகிறது. கொஞ்சம் ஓர்ந்து பார்த்தால் சரி செய்துவிடலாம். அதேபோலத் தான் இருப்பும், இறுப்பும். இன்னும் பல காட்டுக்களைச் சொல்ல முடியும்.
//
தமிழ் அகராதி விரைவில் தூசுதட்டப்பட வேண்டும்
by nirujah on Jan.12, 2012, under தமிழ்
“சாதி என்ற சொல்லை தமிழ்ச் சொல்லகராதியில் இருந்து தூக்குவதற்கு முன்னர் கற்பு என்ற சொல்லைத் தூக்க வேன்டும்.”
இது சில நாற்களுக்கு முன் நான் பேஸ்புக்கில் இடுகையாக இட்டு பின்னர் இது பல கோணங்களில் இழுத்து நீட்டி முழக்கப்பட்ட ஒரு விடயம். அது ஒரு ஆரோக்கியமான விவாதமாக அமைந்ததில் மிக்க மகிழ்ச்சி. இருந்தாலும் இது பற்றி இன்னும் கொஞ்சம் என் மனதில் இருப்பவற்றைப் பகிந்து கொள்வதற்காகவே இந்தப் பதிவு.
நம் தமிழ்ச் சமுதாயம், கல் தோன்றி மண் தோன்றாக் காலத்து முன் தோன்றிய மூத்த குடி என்று போற்றிப் புகழ்ந்து கொண்டு எம்மை நாமே பெருமைப்படுத்திக் கொண்டிருக்கின்றோம். நாகரீகத்தில் பழம்பெரும் வரலாறு கொண்டவர் நாம்; சோழ, சேர, பாண்டிய, பல்லவ அரசுக்களால் காலங்காலமாக செழுமையுற்றது எம் இனம்; உலகின் தொன் மொழிகளுள் ஒன்று எம் தமிழ் மொழி என்றும் அதுவே செம்மொழி என்றும், இதற்கு அக்காலத்தில் முதல், இடை, கடை முதலாக சங்கங்கள் வைத்திருந்தார்கள் என்றெல்லாம் போற்றுகின்றோம்.
இவை எல்லாம் உண்மையாக இருக்கலாம். அதற்கு பல சான்றுகளும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இவை எல்லாம் எம் பழம் பெரும் சமூகத்தின் இறந்த காலம். இப்போது எம் பழம்பெருந் தமிழினத்தின் நிலை தான் உலகம் அறிந்ததே. நாமெல்லாம் நாகரீகம் உடையவர்களாகத் தான் நடந்து கொள்கிறோமா? சாதாரண வீதி ஒழுங்கைப் பின்பற்றுவதில் இருந்து, சாப்பிட்டுவிட்டு மிச்சம் மீதியைப் போடுவது வரைக்கும் வெறும் விலங்குகளாகத் தானே நம் இனம் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இதற்கும் மேலாக, தேவை இல்லாத சாதி, வர்ணம் என்று எத்தனையோ பாகுபாடுகள்; பிரிவினைகள். சாதியம் இல்லாதொழிக்கப்படவேண்டும் என்று ஒரு சாரார் கூவிக்கொண்டு திரிகின்றார்கள். இன்னொரு பக்கம் சாதியத்தின் அடிப்படையில் தான் கல்லூரிகளிலே இட ஒதுக்கீடே கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு சாதி எம் சமூகத்தில் ஒட்டுண்டே வந்திருக்கின்றது. இதனால் நற்பேறு பெற்றோர் ஒருபுறம் இருக்க, வாழ்விழந்தோர் ஏராளம் ஏராள்ம்.

மறுபுறம், கற்பு என்பது என் சமூகத்தில் எவ்வாறு வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது என்று என்னால் இன்று வரை புரிந்து கொள்ள முடியவே இல்லை.
- கற்பு பெண்களுக்குரிய உயரிய ஒழுக்கம் என்கிறார்கள் ஓரிடத்தில்
- கற்பு மனிதனுக்குரியது; ஆண், பெண் இருபாலாருக்கும் பொருதும் என்கிறார்கள் இன்னோரிடத்தில்
- திருமணம் வரை எதிர்ப்பாலரை (?) மனதளவில் நினையாமை தான் கற்பு என்கிறார்கள் பிறிதோரிடத்தில் [பின்னர் கட்டியவனை/ளை மாத்திரம் நினைக்க வேண்டும்]
- கற்பு பெண்ணுக்கு மட்டுமே என கூறுபவர்களும் திருமணத்துக்கு முதல் அவளது கன்னித்திரை கிழியாமல் இருக்க வேண்டும் என்கிறார்கள் [47% பெண்களின் (பாலியல் தொழில் செய்யும் பெண்கள் உட்பட) கன்னித்திரைக்கு நெகுழும் தன்மை உள்ளதாம், அது எப்போதும் கிழிவதில்லையாம். ஆய்வொன்று கூறுகிறது. 11% பெண்களுக்கு மிக மெல்லிய தடிமன் உள்ள கன்னித்திரையுடன் பிறக்கிறார்கள் இவர்கள் உடற்பயிற்சி செய்யும் போதோ, சைக்கிள் போன்ற வாகனங்களில் இருப்பதற்கு காலைத் தூக்கும் போது இது கிழிந்துவிடும். தவிர தற்காலதில் செயற்கையாக கூட கன்னித் திரையைப் பெண்ணுறுப்பில் பொருத்திக் கொள்ளலாம்]
- திருமணத்துக்கு முன்னர் சுய இன்பத்தில் ஈடுபடாமை யிலிருந்து உடலுறவு கொள்ளாமை வரைக்கும் என்ற கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள் சிலர்.
இப்படி என் தமிழ்ச்சமூகம் கற்புக்கு விதித்து வைத்திருக்கும் வரைவிலக்கணங்கல் எண்ணில் அடங்காதவை. எனக்கு இப்படிப்பட்ட கற்பில் நம்பிக்கை இல்லை. கற்பு மனது சம்பந்தப்பட்டது.
“ஒரு பெண்ணோ ஆணோ, தன்னை நம்பி வந்தவரிடம் இதுவரை இப்படியெல்லாம் நடந்திருக்கிறேன். இது தான் நான் என்று கூறி இருவரும் ஒத்துப்போதல் தான் கற்பு”
தமிழ், கலாச்சாரம், பண்பாடு என்று வரிந்து கட்டிக்கொண்டு வருபவர்களுக்கு என்னால் ஒன்றும் செய்ய முடியாது. “Virginity is not a matter of dignity but a lack of opportunity” இது தான் இன்றைய சமூகத்தின் யதார்த்தம். உண்மை. அதற்காக, நாமும் ஆடுமாடுகள் போல் யாருடனேனும் வேண்டும் போதெல்லாம் புணர்ந்து கொண்டு திரியவேண்டுமா என்று கேட்காதீர்கள். ஆனால், இன்றைய வாலிபர்களுக்கு 13 வயதிலேயே பால் சார்ந்த உணர்வுகள் உருவாகிவிடுகின்றன. சிலருக்கு அதற்கு முன்பே. அவர்களுடைய ஓமோன்களையும்(Hormone) கற்பனைகளையும் தூண்டப்படுகின்ற சந்தர்ப்பங்கள் தற்போதைய சமுதாயத்தில் அதிகம். ஆண்கள் மட்டுமல்ல, பெண்களும் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சுய இன்பம் அனுபவிப்பார்கள். இது காலத்தின் தேவை.
ஆக, பிழையாக அர்த்தப்படுத்தப்பட்டு எம்முன்னே பயன்படுத்தப்படும் கற்புக்கு எதற்காக அகராதியில் ஓர் இடம்.
கௌபியும் திருவிழாக்களும்
by nirujah on Nov.20, 2011, under அனுபவங்கள், ஈழம்
கௌபி – இது தான் இதன் சரியான எழுத்துக்கூடலாக இருக்க முடியும். இன்று நீண்ட காலத்துக்கு பிறகு வீட்டிலே கௌபி சாப்பிடச் சந்தர்ப்பம் கிடைத்தது. நீண்டகாலம் என்றால் ஒன்று இரண்டு வருடம் இல்லை; குறைந்தது ஒரு 10 வருடமாவது இருக்கும் நான் இரச்சிச்சு கௌபி சாப்பிட்டு.
இன்று கௌபி சாப்பிட்டு இதைப்பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்று இணையத்தை துலாவினால் ஒன்றுமே அகப்படவில்லை. தமிழ், தெரிந்த ஆங்கில பதங்கள் எல்லாம் போட்டு தேடிக்களைத்துப் போய் இருந்தேன். பின்னர் எமது பச்சிளம் பாலகர் வந்தியின் உதவியுடன் அது கௌபிக்கு ஆங்கிலத்திலும் Cowpea தான் பெயர் என்றும் அது அப்படியே தமிழிலும் பயன்படுத்தப்படுகிறது என்றும் தெரிந்து கொண்டேன்.
இன்னும் நினைவிருக்கிறது. பறாளாய் விநாயகர் அல்லது முருகன் திருவிழாக்களிலும் கம்பனை அம்மன் கோவிலின் செவ்வாய் மற்றும் வெள்ளி மாலைப்பூசைக்கு பின்னரும் வெறும் 7, 8 வயதே நிரம்பிய அந்த பிஞ்சுக் கரங்களால் கொட்டாமல் கௌபி வாங்கி சாப்பிட்டது. பின்னர் வவுனியாவில் பாடசாலை சரஸ்வதி பூசை, மார்கழி மாதத்து அதிகாலையில் குளக்கட்டு பிள்ளையார் கோவிலின் திருவெம்பாவை பூசைகள், வைத்தியசாலைப் பிள்ளையார் என ஒரு வயது வரைக்கும் அடிபட்டு பிரசாதம் வாங்கும் வன்முறைக்கலாச்சாரம் எனக்குள்ளேயும் இருந்தது. கடவுளைப் பார்க்க ஒருகாலமும் கோவிலுக்கு போகாவிட்டாலும், குறைந்த பட்சம் பிரசாதத்துக்கும் அதிகபட்சம் எமது வகுப்பு தோழிகளின் சமூகம் கண்டிப்பாக கோவில்களில் இருந்ததாலும் தவறாது போனோம்.

சின்னவெங்காயத்தை மிகவும் சின்னதாக வெட்டி, அதனுடன் பெருஞ்சீரகம், நற்சிரகம், கடுகு மற்றும் கருவேப்பிலை போட்டு எண்ணையில் வதக்கி, குறைந்தது ஒரு அரைமணிநேரமாவது தண்ணீரில் ஊறவைத்து பின்னர் அளவாக உப்புச்சேர்த்து அவித்த கௌபியை அந்த வதங்கலுக்குள் போட்டு நன்றாக தாழித்து எடுத்தால் எழுகின்ற கமகம வாசனை வார்த்தைகளால் விபரிக்க முடியாதது. இதை கோவிலில் வெறும் ஒரு கைப்பிடியளவு மட்டுமே வாங்கி சப்புக்கொட்டி சாப்பிட்டு இன்னும் கொஞ்சம் கிடைக்காதா என்று வருகின்ற அந்த உள்ளுணர்வுக்காகவே தினமும் கோவிலுக்கு போகலாம்.
அட, கௌபியைப் பற்றி சொல்லவந்து கடைசியில் சமயல் குறிப்புதான் எழுத முடிஞ்சது. சின்னஞ்சிறு வயதில் இதுபோன்ற நிகழ்வுகளை அனுபவிக்காதவர்கள் உண்மையிலேயே அபாக்கியசாலிகள் தான்.
கௌபி, ஆசிய, ஆபிரிக்க மற்றும் சில ஆபிரிக்க நாடுகளிலும் விளைகின்றது. அதிகமாக மனிதர்களும் மிருகங்களும் இதனை உணவாகக் கொள்கின்றனர். எங்கள் ஊரில் கௌபியில் தேங்காய்ப் பால் விட்டு குழம்பு மாதிரி ஒரு உணவு வகையும் பிரபலம்.

