மாநகர குப்பை வண்டிகளே…
by nirujah on Jun.22, 2011, under அனுபவங்கள், பதிவுலகம், பொது
நமது அன்றாட வாழ்க்கையில் சுமூகமான ஓட்டத்துக்கு பலரும் பல வழிகளில் உதவுகின்றார்கள். நாம் எவ்வளவு வசதி படைத்தவர்களாக இருந்தாலும், முப்பாட்டன் காலத்திலிருந்து பரம்பரைக் கோடீஸ்வரர்களாக இருந்தாலும், எனக்காக தனியாக ஒரு பள்ளிக்கூடம் கட்டி அதில் நாம் மட்டுமே படிக்க முடியாது. அப்படியே படித்தாலும், சாதாரண ஒரு மாணவனாக ஒரு பாடசாலையில் 50 பேர் கொண்ட வகுப்பில் அடிக்கும் லூட்டிகளும் தேடிப்பார்த்தாலும் கிடைக்காது. அது போல தான், போரூந்துகள், தொடரூர்ந்துகள், சாலை திருத்துவோர், அரிசி, காய்கறிகள் மற்றும் எவையாக இருந்தாலும் நாம் பிறரைச் சார்ந்தே இருக்க வேண்டும்.

அதே போல தான் நகர் பகுதிகளில் தினமும் அல்லது ஒன்று விட்ட ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள குப்பைவண்டிகளும் தொழிளாலர்களும். அவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டாலோ, அல்லது வேலைப்பகிஸ்கரிப்பு செய்தாலோ நாம் படும் அவலங்களும் கஷ்டங்களும் நாம் உணர்ந்ததே.
ஆனால் இதையே ஒரு சாட்டாக வைத்துக்கொண்டு இத்தொழிலாளர்கள் செய்யும் அட்டகாசமோ அளவுக்கு அதிகம். மற்ற இடங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது. நான் கொழும்புக்கு வந்ததில் இருந்து பல இடங்களில் வசித்தாலும், அவை அனைத்தும் தெகிவளை மாநகராட்சி சபைக்கு உட்பட்ட பிரதேசத்துக்குள்ளேயே இருந்துள்ளேன். எல்லாப் பகுதிகளிலும், குப்பை சேகரிக்கவருபவர்கள் மக்களிடையே வலுக்கட்டாயமாக ஒரு தொகைப்பணத்தை மாதாமாதம் அறவிடுகின்றர்கள்.
இவ்வாறாக, குப்பை சேகரிக்கச் செல்லும் போது மக்களிடம் பலாத்காரமாக பணம் வாங்குதல் நகராட்சி சட்டத்திலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ சட்டமாக இருக்கிறதோ எனக்குத் தெரியாது. மனிதாபிமான அடிப்படையில், இவர்கள் குப்பை சேகரிக்கப்போகும் இடத்தில் இருக்கின்ற மக்கள் அவர்களாக அன்பளிப்பு அடிப்படையில் பணம் கொடுப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இப்படி அன்பளிப்பு அடிப்படையில் உருவான கலாச்சாரம் தான் இப்போது இப்படி கட்டாய பணவசூலாக மாறியிருக்கிறதோ தெரியாது. எனினும் கண்டிப்பாக இவ்வளவு பணம் தர வேண்டும் அல்லது அடுத்தமுறை குப்பை எடுக்க வரமாட்டோம் என்று மிரட்டுவது எந்தவிதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.
குறிப்பாக, இரு வருடங்களுக்கு முதல், நான் தெகிவளை லியனகே வீதியில் வசித்தபோது, அந்த தெருவில் எல்லாத்தரப்பான மக்களும் வாழ்கின்றார்கள். ஒரு சிலரால் மாதம் 100 ரூபாவோ 150 ரூபாவோ கொடுக்கமுடியாமல் இருந்திருக்கலாம் போலும். இதனைக் காரணமாகக் காட்டி, அந்தத் தெருவுக்கே குப்பை எடுக்க வருவதில்லை. அந்தக்காலத்தில் தெருவோரங்களில் குப்பை போடுதல் சட்டவிரோதமாக இல்லாமல் இருந்த காரணத்தால் எம் தெருவில் உள்ள அனைவரும் தினமும் காலிவீதிக்கு அருகாமையில் இருக்கும் ஒரு குப்பை மேட்டுக்கே எமது குப்பைகளை கொண்டு சென்று வீசி இருந்தோம். ஏன் நான் இப்போது இருக்கும் பகுதியில் கூட மாத முடிவில் கண்டிப்பாக அவர்களுக்கு கொடுக்கப்படவேண்டிய பணம் வசூலிக்கப்பட்ட பின்னரே, குப்பைகளை அப்புறப்படுத்துக்கின்றார்கள்.
எனக்கு இப்போது இருக்கும் சந்தேகம் எல்லாம், ஒரு ஜனநாயக நாட்டிலே, அரச தொழிலாளர்களுக்கு மக்களின் வரிப்பணத்திலேயே சம்பளம் வழங்கப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி, சாதாரண மக்களிடமும் இப்படி பலவந்தமாக காசு வாங்குகிறார்களே இதை மேலதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லையா. அல்லது இத் தொழிலாளர்களின் இந்த பொறுப்பில்லாத செயல்களுக்கு மேலதிகாரிகளும் உடந்தையா?
2 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
June 22nd, 2011 on 1:39 pmமாநகர குப்பை வண்டிகளே… « செவ்வானச் சிதறல்கள்……
நகர் பகுதிகளில் தினமும் அல்லது ஒன்று விட்ட ஒவ்வொரு நாளும் அரசாங்கத்தால் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள குப்பைவண்டிகளும் தொழிளாலர்களும். அவர்கள் ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டாலோ, அல்லது வேலைப்பகிஸ்கரிப்பு செய்தாலோ நாம் படும் அவலங்களும் கஷ்டங்களும் நாம் …

June 22nd, 2011 on 7:33 pm
சமூகம் மீதான உங்கள் கோபம புரிகிறது!! நாங்களே பழக்கி விட்டது இப்போது அவர்களுக்கு அது இல்லாமல் இருக்க முடியவில்லை போலும்!!!!
// இதை மேலதிகாரிகள் யாரும் கண்டு கொள்வதில்லையா. அல்லது இத் தொழிலாளர்களின் இந்த பொறுப்பில்லாத செயல்களுக்கு மேலதிகாரிகளும் உடந்தையா?//
சொல்ல முடியாது !!! இதுவும் இலங்கை அரசின் ஒரு பிரிவுதான்!!!!
June 25th, 2011 on 10:08 am
தேவையான ஒரு பதிவு.