செவ்வானச் சிதறல்கள்…

Archive for February, 2011

அதிசயத் திருமணம்

by on Feb.18, 2011, under கவிதைகள்

மூன்றடி இடைவெளியி
தூண்களாய் இரு தென்னைகள்;
ஓலைக் கண்ணறை
தொலைவானைப் படம்பிடித்தது.

செம்மஞ்சள் நிறத்திலோர்
அற்புதக் கிரகம்;
இடையிடையே திருஷ்டிப் பொட்டாய்
மழைமேகங்கள்;
மொத்ததில் அவனில்
புதுமாப்பிளைப் பிரகாசம்.

ஆம்…
இது ஓர் அதிசய,
அற்புத திருமணம்.

மாப்பிள்ளையாய் கதிரவன்
மணப்பெண்ணாய்ப் பூமி;
திருமணத்தின் விருந்தினராய்
பூமியின் சீவராசிகள்;

காலைப் பண்பலையின் மங்களம்
முழங்க – வீதிக்கோலத்தின்
குறுனல் அட்சதையாய்;
சிங்காரச் சிட்டுகளின் குறுகுறுப்பு
சிறு மந்திரமாய்.

தமிழ்ப் பெண்கள் எல்லாம்
குடங்குடமாய் பன்னீர் தெளிக்க
விருந்தினரை கிளிகள் பறந்து
பறந்து உபசரிக்க.

கதிரவண் தன் ஒளிகரங்களால்
பூமிக்கு வண்ணமடித்து
தாலிகட்ட – ஓர்
அதிசயத் திருமணம்

குறிப்பு: இது நான் திருச்சி (தமிழ்நாடு)ல் கல்விகற்றுக்கொண்டிருந்த 2001/2002 காலப்பகுதியில், காவேரித் தண்ணிக்காக குடங்களுடன் பொதுக்குழாயின் முன் நீண்டவரிசையில் நின்றபோது உண்டான கற்பனை ;)

6 Comments :, , , , , , , more...

பாலியல் தொழிலாளர்களின் இரகசியங்கள்

by on Feb.09, 2011, under பதிவுலகம்

இவ்வுலகில் பாலியல் தொழில் இல்லாத நாடே இல்லை எனலாம். பொதுவாக எல்லா நாடுகளிலும் பாலியல் தொழில் சட்டபூர்வமாகவோ, சட்டத்துக்கு புறம்பாகவே நடந்து கொண்டு தான் இருக்கிறது. வீதியோரத்தில் இருந்து தமது தொழிலுக்காக ஆட்களைப் பிடிப்பதில் இருந்து, முகவர் மூலமாகவோ அல்லது குறிப்பிட சில நட்ச்சத்திர விடுதிகள் மூலமாகவோ தமது வருமானத்துக்காக தொழில் செய்பவர்கள் இருக்கின்றார்கள். இதை விட பொழுதுபோக்குக்காகவோ அல்லது ஒரு வித்தியாசமான அனுபவத்துக்காகவோ இந்த தொழிலில் ஈடுபடுவர்களும் இருக்கின்றார்கள். இந்த எல்லா வகையிலுமான பாலியல் தொழிலாளர்கள் இலங்கையிலும் இருக்கின்றார்கள்.

இவர்களின் இரகசியங்கள் என நான் கூறவந்த விடயம், இவர்கள் கண்டிப்பாக வைத்திருக்கும் பொருட்கள் மற்றும் வைத்திருப்பதைத் தவிர்க்கும் பொருட்கள் பற்றியது. பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் தமது வாடிக்கையாளர்களின் தொடர்பு, தொழிலில் ஈடுபடுபவர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் வாடிக்கையாளர் திருப்திக்காக சிலபொருட்களை அல்லது சில விடயங்களை வைத்திருப்பதை முக்கியமாகக் கருதுகிறார்கள்.

கண்டிப்பாக வைத்திருக்கும் பொருட்கள்

  • குறைந்தது இரண்டு தொலைபேசிகள்: தமது வாடிக்கையாளர்களினுடைய தொடர்பாடலுக்காகவும், சிலவேளைகளில் அவர்களின் தொலைபேசிகள் வேண்டுமென்றே களவாடப்படுவதாலும் பாலியல் தொழிலாளர்கள் குறைந்தது இரண்டு தொலைபேசிகளாவது வைத்திருக்கின்றார்கள்.
  • உள்ளாடை: இக்கட்டான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்காக மட்டுமன்றி, சில ஆண்கள் அவர் அணிந்திருந்த உள்ளாடைகளை விரும்பி எடுத்துச் செல்வதோடு அதற்காக பணமும் கொடுக்கிறார்களாம்.
  • பன்டெஜ் மற்றும் சிராய்ப்புகளுக்கு பூசும் மருந்துகள்: தமது தொழிலில் போது உடலில் ஏற்படக்கூடிய காயங்கள், சிராய்ப்புகள் போன்றவற்றில் இருந்து விரைவாக குணமாவதற்கு இவற்றைப் பயன்படுத்துகின்றார்கள்.
  • சுவீங்கம் மற்றும் மின்ட்ஸ் ( chewing gum & mints): தொழில் நேரங்களில் தமது வாய் எப்போதும் புத்துணர்ச்சியாக இருக்கவேண்டும் என்று விரும்புகின்றார்களாம்.
  • ஆணுறைகள் மற்றும் உராய்வுநீக்கி எண்ணெய்கள்: உடலுறவு நேரங்களில் பெரும்பாலான ஆண்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதாலும், அதனை பாலியல் தொழிலாளர்களிடமே எதிர்பார்ப்பதாலும் இவை அத்தியாவசியமாகின்றது. இருப்பினும், சில ஆண்கள் ஆணுறை இல்லாமல் உடலுறவு கொள்ள விரும்புகின்றார்களாம். இதற்கு 25% இருந்து 30% அதிகமாக பணம் பெறப்படுகின்றதாம்.

கண்டிப்பாக வைத்திருக்க விரும்பாத பொருட்கள்

  • பெயர் விபரங்களுடன் கூடிய தொலைபேசிகள்: எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பாலியல் தொழிலாளர்கள் தமது அடையாளத்தை வெளிக்காட்ட விரும்புவதில்லையாம்.
  • அடையாள அட்டைகள்: இதுவும் பாலியல் தொழிலாளர்களின் சுயவிபரங்களை வெளிப்படுத்த விடாமல் தவிர்க்கும் ஒரு முயற்சியாம்.
  • வங்கி அட்டைகள் மற்று கடன் அட்டைகள்: ஒரு பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும் அவர்கள் வதிவிடம் பற்றிய விபரங்கள் இவ்வகையான அட்டைகள் மூலமாக தெரியவருவதைத் தடுப்பதற்காகவும் இவற்றை வைத்திருப்பதை தவிர்க்கின்றார்கள்.
  • விடுதி பற்றுச்சீட்டுகள்: எப்போதுமே ஆண்கள் விடுதி மற்றும் பிற செலவினங்களுக்கான பணத்தைச் செலுத்தும் முட்டாள்களாக இருப்பதால் இது போன்ற பற்றுச்சீட்டுகள் கையாள்வதற்கான்ன தேவை அவர்களுக்கு இருந்ததே இல்லையாம்.

இது தவிர வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள அனேகமான பாலியல் தொழிலாளர்கள் இத்தொழிலை முழுநேரமாக செய்வதில்லையாம். பகல் நேரங்களில் இவர்களின் கல்விக்கு தகுந்த ஏதாவது ஒரு வேலையைச் செய்பவர்களாகவே இருக்கின்றார்கள். முகவர்கள் மூலமாக வாடிக்கையாளர்களைப் பெறுபவர்கள் பொதுவாக 25% வரையான வருமானத்தை முகவர்களுக்கு செலுத்த வேண்டியவர்களாகவும், வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இது 35% வரை செல்வதாகவும் தெரிவிக்கின்றார்கள்.

மேலும், முன்னையகாலத்தில் மேலைநாடுகளில் தமது தொழில் நடவடிக்கைகளின் தகவல் மையமாக இணையத் தளங்களை வைத்திருந்தவர்கள், தற்போது முகப்புத்தகம் போன்ற சமூகவலையமைப்பு மூலம் தமது தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்பது கூடுதல் தகவல்.

9 Comments :, , , , , more...

ஃபக்கோடா [04-02-11]

by on Feb.04, 2011, under அனுபவங்கள், ஈழம், பதிவுலகம்

என்னடா இவன் புதுசா ஃபக்கோடாவோட ஆரபிச்சிருக்கிறானே எண்டு யாரும் திட்டாதீங்க. அப்பப்ப போடுற பதிவுகளுக்கு ஏதாவது தலைப்பு வைக்க வேணும் என்டு கன நாலா யோசிச்சு கொண்டு இருந்தனான். நூடுல்ஸ், பர்கர், பாஸ்ட்டா என்டு எல்லா பெயரும் போய்விட, கடைசியில் கடந்த பதிவர் சந்திப்பில் பிரபலமான ஃபக்கோடா தான் மிஞ்சியது. சரி, ஒருத்தரும் அதற்கு இதுவரை சொந்தம் கொண்டாடாதபடியால் இனி அப்பப்ப ஃபக்கோடா வரும். பல நாட்களாக எழுத நினைத்தும், அதற்கும் அதிகமாக ஆணிபுடுங்க வேண்டியிருந்ததால் எழுத முடியவில்லை.

#tnfisherman

இந்த விடயம் பற்றி நான் கீச்சுவில் ஏற்கனவே சொல்லியிருந்ததால், இது பற்றி நிகழ்ந்த எந்தவிதமான விவாதத்திலும் கலந்து கொள்ளவில்லை. தனிப்பதிவும் போடவில்லை.

  • இலங்கை மீனவர்களின் வளம் சுரண்டப்படுகின்றது.
  • இந்திய மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டி உள்ளேவருகின்றார்கள்.
  • பாரிய ரோலர்களில் வருகின்றவர்களினால் இலங்கை மீனவர்களின் வலைகள் அறுக்கப்படுகின்றன.
  • இலங்கைக் கடற்படை பலவேளைகளில் இந்திய மீனவர்களைக் கைது செய்தும், சிலவேளைகளில் அவர்களைக் கொலைசெய்தும் கொண்டிருக்கின்றது.
  • கொல்லப்பட்ட இந்திய மீனவர்கள் அனைவரும் வெறும் படகுகளில் வந்து தம் வாழ்வாதாரத்துக்காக மீன்பிடிப்பவர்கள்.
  • இதற்கெல்லாம் முடிவு கச்சதீவை திரும்பப் பெறுவது மட்டும் தான்
  • நிருபமாராவ் வருகை.
  • தமிழருக்கு பிரச்சனை வரும்போது எப்போதும் ஒரு மலையாளியே இலங்கைக்கு அனுப்பப்படுகின்றார்

இப்படியாக பல கருத்துக்கள் உலாவின. சற்று முன்னர் நான் கேட்ட ஒரு செய்திக்குறிப்பில் வடபகுதி மீனவர்களுக்கு இன்னமும் கடலில் மீன்பிடிப்பதற்கான கட்டுப்பாடுகள் நீக்கப்படாதவிடத்து, தென்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மீனவர்கள் வடபகுதிக் கடல்களில் மீன் பிடிக்கிறார்கள் என்பது தான்.

இப்படிப் பல விடயங்கள் பேசப்பட்டுக்கொண்டிருக்கின்ற இக்காலகட்டத்தில், #tnfisherman என்று இணையத்தில் ஏற்பட்டுள்ள ஒரு அலையைப் பற்றி சிலர், அது ஒரு கண்துடைப்பு, தமிழகத்தின் அரசியல் பின்புலத்தில் உருவானது என்று பல்வேறு வகையாக விமர்சிக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப்பிரச்சனையிலாவது இணையத்தில் ஒரு அலை உருவாகியிருக்கின்றது. இதற்கு பின் என்ன நடக்கின்றது என்பதை ஆராய்கின்ற சந்தர்ப்பத்தில், அதன் வலிமை வரவேற்கப்படவேண்டியது. ஒரு விடயம் கவனித்தீர்களா, இதுவரை சுமார் 500 வரையான தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாக கூறுகின்றார்கள். ஒவ்வொரு காலகட்டத்திலும், இந்திய(தமிழக), இலங்கைப் பத்திரிகைகளில் இது ஒரு செய்தியாக போடப்பட்டது. ஒரு கட்டத்தில் இராமேஸ்வர மீனவர்கள் தொடர்ந்து தொழிலுக்கு போகாமல் பகிஷ்கரிப்பும் உண்ணாவிரதமும் இருந்தார்கள். 2003 – 2004 பகுதியில் சன் தொலைக்காட்சி இதை பூதாகாரப்படுத்தியது. இருந்தும் அன்று, இப்போது நாம் விவாதிப்பது போல் நம் இலங்கை மீனவர்களைப் பற்றி பேசவே இல்லை.

ஆக, #tnfisherman என்ற அலை, பலவிடயங்களைப் பற்றி எம்மைப் பேசத்தூண்டி இருக்கின்றது. நாமும் நமது மீனவர்களைப் பற்றி கொஞ்சமாவது பேச முற்பட்டிருக்கின்றோம். இது வெறும் காலமாற்றத்தால் உருவானதாகக்கூட இருக்கலாம். இதனை ஆதரிப்பதோ விமர்சிப்பதோ அவரவர் புரிந்துணர்தலுக்கு இயல்பானது.

சுதந்திர தினம்

இன்று இலங்கைக்கு சுதந்திர தினமாம். நல்லது. அதுவும் 63வது சுதந்திரதினமாம். அது மட்டுமல்ல, 2வது சுதந்திர தினமும் கூடவாம். கடந்த வருடம் சுதந்திர தினம் கண்டியில் கொண்டாடப்பட்டதாம். இம்முறை கதிர்காமம் என்று அழைக்கப்பட்ட கதரகமவில் கொண்டாடப்படுகின்றதாம்.  ஏனென்றால் இது ஒரு அனைத்து மக்களுக்கும் பொதுவான(?) வழிபாட்டுத் தலமாம்.

இயற்கை

மீண்டும் கிழக்கில் மழையும் குளிர்காலநிலையும் அதிகரித்து விட்டன. கிழக்கின் நீரேந்து பிரதேசங்களின் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. மீண்டும் மக்கள் அவலங்களை எதிர்நேக்கத் தொடங்கி விட்டார்கள். இன்று காலையில் தான் மன்னர் தனது உரையில், துரித கதியில் முழு அளவில் மக்களுக்கு உதவுவோம் என்று. பாப்பம்.

இது இப்படி என்றால், ஒஸ்ரேலியாவின் குயின்ஸ்லாட் பகுதியை தாக்க ஆரம்பித்த, யாசி என்று பெயர்வைக்கப்பட்ட சூறாவளி இதுவரை பல கோடி மதிப்பான பொருட்சேதத்தை ஏற்படுத்தி உள்ளதோடு இது வரை ஒருவர் இறந்தும் இருவர் காணாமலும் போயுள்ளனர். யாசி தற்போது தொடர்ந்து ஒஸ்ரேலியாவின் குறுக்காக பயனித்துக்கொண்டிருக்கிறது. இது குயின்ஸ்டான்டை தாக்கும் போது, மணிக்கு சுமார் 290 கிமீ வேகத்தில் இருந்தது. இதன் குறுக்களவானது மிகவும் பெரியதாக கிட்டத்தட்ட முழு ஐக்கியராட்ச்சியத்தையே அதற்குள் கொள்ளும் அழவு பெரிதாக உள்ளது.

10 Comments :, , , , , more...

வந்தவர்கள்

free counters