Archive for January, 2011
அனுராதபுரத்தின் தமிழ் எச்சங்கள்
by nirujah on Jan.11, 2011, under அனுபவங்கள், பதிவுலகம்
நீண்ட நாட்களாக எழுத நினைத்து இருந்த ஒரு விடயம் இது. கடந்த வருடம் தீபாவளிக்கு முதல் நாள், எனது உறவினர் ஒருவருடன் அனுராதபுரம் செல்ல நேர்ந்தது. அவர் பிறந்தது முதல் திருமணம் முடிக்கும் வரை, கிட்டத்தட்ட சுமார் 25 வருடங்களுக்கு மேல் அனுராதபுரத்திலேயே வாழ்ந்தவர். அது நாள் வரைக்கும் அனுராதபுரத்தில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்ற கதையே எனக்கு தெரியாது. வேண்டுமென்றால் யாராவது ஓரிரு குடும்பகங்கள் தொழில் நிமிர்த்தமாக அங்கு வாழ்ந்திருக்கலாம் என்றே எண்ணியிருந்தேன்.
ஆனால் அங்கே எனக்கு பல அதிர்ச்சிகள் காத்திருந்தன. முதல் அதிர்ச்சி, அங்கே இருந்த இரு இந்து ஆலயங்கள். ஒன்று முருகன் ஆலயம். இன்னொன்று பிள்ளையார் கோவில். முருகன், பிள்ளையார் போன்ற இந்துக் கடவுள்களை அனுராதபுரத்தில் செறிந்து வாழும் சிங்கள் மக்களும் வணங்குவது பொதுவான ஒன்று எண்டு வைத்துக்கொண்டாலும், அதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றும் இருந்தது. அங்கே பெரிய தமிழ் பாடசாலை ஒன்றும் உள்ளது. விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயம் என்பது இதன் பெயர். அது மட்டுமல்லாமல், விவேகானந்த சொசைட்டி போன்ற பல நிறுவனங்களும் இருந்துள்ளன; இருக்கின்றன.

1950 களின் இறுதிக்கால கட்டத்தில் இருந்து விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்தில் பெரும்பான்மையாக தமிழ் மாணவர்களே கல்வி கற்று வந்துள்ளனர். இந்த பாடசாலை அனுராதபுர நகரின் மையப்பகுதியில் இருந்து வெறும் 1கிலோ மீற்றர் சுற்றுவட்டத்துக்குள்ளேயே இருக்கிறது. 1970களின் இறுதிக் காலப்பகுதியில் நடைபெற்ற இனக்கலவரங்களால், இங்கு வாழ்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அன்றைய காலகட்டத்திலேயே வெளியேறிவிட்டனர். தற்போதும் இந்த பாடசாலை இங்கு செயற்படுகின்றது. ஆனால் தற்போது அதிகமாக முஸ்லிம் சமூகத்தவர்களே கல்வி கற்கின்றனர்.
இதைவிடக் கொடுமையான விடயம், அங்கு இருந்த ஆலயங்களில், கதிரேசன் கோவில் என அழைக்கப்படும் முருகன் ஆலயம் இந்த விவேகானந்த தமிழ் மகாவித்தியாலயத்துக்கே சொந்தமானதாம். ஆனால் 1985க்கும் பின்னர் இந்த ஆலயம் முற்றாக மூடப்பட்டிருந்ததாக அறியப்பெற்றேன். 2000ம் ஆண்டுக்கு பின்னர், ஓய்வுபெற்ற ஒரு வான்படை உத்தியோகத்தரும், பிறப்பிலே தமிழ் சைவரும் மற்றும் சிறுவயதிலிருந்தே அவர் அனுராதபுரத்திலே வசித்து வந்த ஒருவரின் ஊக்கத்தினால் மீண்டும் இக்கோயில் திறக்கப்பட்டு, பூசை வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதற்கு அருகில் இருக்கும் பிள்ளையார் ஆலயமும் இவராலேயே தற்போது பராமரிக்கப்பட்டு வருகின்றது. இதை விட, இன்னும் நகருக்கு வெளியே ஓர் அம்மன் கோவில் இருப்பதாகவும் கேள்விப்பட்டேன். ஆனால் போக அவகாசம் கிடைக்கவில்லை. இது தவிர, நகருக்குள்ளே பல தமிழ்க்கடைகள் தமிழ்ப் பெயர்பலகையுடன் இருந்ததையும் நான் ஆச்சரியத்துடன் பார்க்கத் தவறவில்லை.
இவை அனைத்தும் வரலாறுகள். ஒரு புராதன நகரிலே, அதுவும் இந்த நாடு விடுதலை அடைந்த பின்னர், இங்கே ஒரு தமிழ் பள்ளிகூடம் அமைக்க வேண்டிய அளவுக்கு இங்கே தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். தற்போது நாம் கொழும்பில் வெள்ளவத்தையிலோ, கொட்டகெனாவிலோ அல்லது சொய்சா புரவிலோ வாழ்ந்து கொண்டிருப்பது போன்று சிறிய வட்டத்துக்குள் வாழ்ந்திருக்க சாத்தியங்கள் குறைவு. ஆகவே, தற்போது, வவுனியாவின் ஜோசப் காம்ப்க்கு அருகாமைசார்ந்த கற்குழியின் எல்லையுடனான பகுதியுடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ள தமிழர்கள் வாழ்கின்ற பிரதேசம் கண்டிபாக அனுராதபுரம் வரை ஓர் தொடர்பினை கொண்டிருந்திருக்க வேண்டும். இது தவிர, நான் அங்கு சிலருடன் கதைத்த வேளை, இப்போதும் பல தமிழ்க்குடிகள் அனுராதபுரத்திலிருந்து, மிகிந்தலை வரையான பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, தமது அடையாழத்தை இழந்து வாழ்ந்து கொண்டிருப்பதாக கூறினார்கள். அது தவிர, நகருக்குள் இருந்த பல வீடுகளை காண்பித்து, இவை அந்த நாட்களில் தமிழ்ர்களுக்கு சொந்தமாக இருந்ததாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
நான் அதிகம் வரலாறு சார்ந்த புத்தகங்களை வாசிக்க தவறியதால் எனக்கு இவை தெரியாமல் போனதோ, அல்லது புத்தகங்களிலும் இவை இல்லையோ நான் அறியேன். ஆனால், இவை முடிந்த வரலாறுகளாக பார்க்க முடியாது. இது ஓர் தொடர்ச்சி. இடையே ஏற்பட்ட யுத்த சூழ்நிலையால் இது சற்றே மந்த கதியில் இருந்திருக்கலாம். ஆனால் தற்போது மீண்டும் வரலாறு வளைக்கப்பட முயலப்படுகின்றது. என்ன செய்ய, எனது உணர்வுகள் பலகாலமாகவே விரல் நுனிக்கும், தட்டச்சு விசைகளுக்கும் இடையே தற்கொலையுறுகின்றன.
IPL 2011 ஏலம் ஓர் நேரடி அலசல்
by nirujah on Jan.08, 2011, under கிறிகட், விளையாட்டு
இந்தியாவின் சிறந்த வியாபாரியென பலராலும் விபரிக்கப்பட்ட, லலித்மோடியின் சிந்தனையில் உருவான ஐபிஎல் உலகக் கிறிகட் வரலாற்றை மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதாரத்தையே மாற்றிப்போட்டது என்றால் மிகையாகாது. எத்தனை பெரிய ஏலங்கள், எத்தனை பெரிய விளம்பர ஜாம்பவான்கள் என்று உலகத்தையே திரும்பிப்பார்க்க வைத்த ஐ.பி.எல் கடந்தவருடம் பல அதிர்ச்சி தரும் தகவல்களை வெளிப்படுத்தி, பல அணிகள் கலைக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இருந்தாலும் மீண்டும் இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபையின் மூலம் மீண்டும் தற்போது ஏலம் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
மதிய இடைவேளை வரை நடைபெற்று முடிந்த ஏல எடுப்பில், முதலாவதாக ஏலம் விடப்பட்ட கவுதம் கம்பீர், எதிர்பார்த்த படியே அதிக விலைக்கு விற்கப்பட்டார். 2.4 மில்லியன் டொலர்களுக்கு கொல்கொத்தா அணி வாங்கியது. கெவின் பீட்டசன் $650,000 க்கே டெக்கனால் வாங்கப்பட்டார். கங்குலியை யாருமே ஏலமெடுக்காதது கங்குலி இரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றதை அளித்திருக்கும். கிறிஸ் கயிலும் யாராலும் வாங்கப் படவில்லை. தற்போது சைமன்சை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது. எனவே ஹர்பஜன் சிங்கும் சைமன்சும் ஒரே அணியில் விளையாடப்போகின்றார்கள். உலக தரப் போட்டிகளில் நேர் எதிரிகளாக இருந்தவகள் தற்போது ஒரே அணீயில் விளையாடப்போகின்றார்கள். ஐ.பி.எல் இன் இன்னுமொரு வரப்பிரசாதமாக இதைச் சொல்லலாம்.
தற்போதைய நிலையில் வீரர்கள் வாங்கப்பட்ட நிலைகள்:
| Player Name | Country | IPL Team | Cost (USD) |
|---|---|---|---|
| Sachin Tendulkar (retained) | India | Mumbai Indians | 1800000 |
| Harbhajan Singh (retained) | India | Mumbai Indians | 1300000 |
| Kieron Pollard (retained) | West Indies | Mumbai Indians | 900000 |
| Lasith Malinga (retained) | Sri Lanka | Mumbai Indians | 500000 |
| MS Dhoni (retained) | India | Chennai Super Kings | 1800000 |
| Suresh Raina (retained) | India | Chennai Super Kings | 1300000 |
| M Vijay (retained) | India | Chennai Super Kings | 900000 |
| Albie Morkel (retained) | South Africa | Chennai Super Kings | 500000 |
| Shane Warne (retained) | Australia | Rajasthan Royals | 1800000 |
| Shane Watson (retained) | Australia | Rajasthan Royals | 1300000 |
| Virender Sehwag (retained) | India | Delhi Daredevils | 1800000 |
| Virat Kohli (retained) | India | Royal Challengers Bangalore | 1800000 |
| Gautam Gambhir | India | Kolkata Knight Riders | 2400000 |
| Tillakaratne Dilshan | Sri Lanka | Royal Challengers Bangalore | 650000 |
| Yusuf Pathan | India | Kolkata Knight Riders | 2100000 |
| Zaheer Khan | India | Royal Challengers Bangalore | 900000 |
| AB de Villiers | South Africa | Royal Challengers Bangalore | 1100000 |
| Ross Taylor | New Zealand | Rajasthan Royals | 1000000 |
| Kevin Pietersen | England | Deccan Chargers | 650000 |
| Yuvraj Singh | India | Pune Warriors | 1800000 |
| Mahela Jayawardene | Sri Lanka | Kochi | 1500000 |
| Daniel Vettori | New Zealand | Royal Challengers Bangalore | 550000 |
| Adam Gilchrist | Australia | Kings XI Punjab | 900000 |
| Jacques Kallis | South Africa | Kolkata Knight Riders | 1100000 |
| Irfan Pathan | India | Delhi Daredevils | 1900000 |
| Rahul Dravid | India | Rajasthan Royals | 500000 |
| Johan Botha | South Africa | Rajasthan Royals | 950000 |
| Rohit Sharma | India | Mumbai Indians | 2000000 |
| Andrew Symonds | Australia | Mumbai Indians | 850000 |
| Cameron White | Australia | Deccan Chargers | 1100000 |
| Kumar Sangakkara | Sri Lanka | Deccan Chargers | 700000 |
| Graeme Smith | South Africa | Pune Warriors | 500000 |
| Robin Uthappa | India | Pune Warriors | 2100000 |
| VVS Laxman | India | Kochi | 400000 |
| Brendon McCullum | New Zealand | Kochi | 475000 |
| Sreesanth | India | Kochi | 900000 |
| RP Singh | India | Kochi | 500000 |
| Michael Hussey | Australia | Chennai Super Kings | 425000 |
| Shaun Marsh | Australia | Kings XI Punjab | 400000 |
| JP Duminy | South Africa | Deccan Chargers | 300000 |
| Shikhar Dhawan | India | Deccan Chargers | 300000 |
| Saurabh Tiwary | India | Royal Challengers Bangalore | 1600000 |
| David Hussey | Australia | Kings XI Punjab | 1400000 |
| David Warner | Australia | Delhi Daredevils | 750000 |
| Parthiv Patel | India | Kochi | 290000 |
| Wriddhiman Saha | India | Chennai Super Kings | 100000 |
| Dinesh Karthik | India | Kings XI Punjab | 900000 |
| Naman Ojha | India | Delhi Daredevils | 270000 |
| Brad Haddin | Australia | Kolkata Knight Riders | 325000 |
| Tim Paine | Australia | Pune Warriors | 270000 |
| Davy Jacobs | South Africa | Mumbai Indians | 190000 |
| James Hopes | Australia | Delhi Daredevils | 350000 |
| Ravindra Jadeja | India | Kochi | 950000 |
| Shakib Al Hasan | Bangladesh | Kolkata Knight Riders | 425000 |
| Stuart Broad | England | Kings XI Punjab | 400000 |
| Abhishek Nayar | India | Kings XI Punjab | 800000 |
| Angelo Mathews | Sri Lanka | Pune Warriors | 950000 |
| Dwayne Bravo | West Indies | Chennai Super Kings | 200000 |
| Steven Smith | Australia | Kochi | 200000 |
| James Franklin | New Zealand | Mumbai Indians | 100000 |
| Ishant Sharma | India | Deccan Chargers | 450000 |
| Praveen Kumar | India | Kings XI Punjab | 800000 |
| Ashish Nehra | India | Pune Warriors | 850000 |
| Brett Lee | Australia | Kolkata Knight Riders | 400000 |
| Morne Morkel | South Africa | Delhi Daredevils | 475000 |
| Dale Steyn | South Africa | Deccan Chargers | 1200000 |
| Ryan Harris | Australia | Kings XI Punjab | 325000 |
| Dirk Nannes | Australia | Royal Challengers Bangalore | 650000 |
| Doug Bollinger | Australia | Chennai Super Kings | 700000 |
| Muttiah Muralitharan | Sri Lanka | Kochi | 1100000 |
| Piyush Chawla | India | Kings XI Punjab | 900000 |
| R Ashwin | India | Chennai Super Kings | 850000 |
| Pragyan Ojha | India | Deccan Chargers | 500000 |
| Amit Mishra | India | Deccan Chargers | 300000 |
| Nathan McCullum | New Zealand | Pune Warriors | 100000 |
| Ramesh Powar | India | Kochi | 180000 |
| Aaron Finch | Australia | Delhi Daredevils | 300000 |
| Eoin Morgan | England | Kolkata Knight Riders | 350000 |
| Brad Hodge | Australia | Kochi | 425000 |
| Callum Ferguson | Australia | Pune Warriors | 300000 |
| Manoj Tiwary | India | Kolkata Knight Riders | 475000 |
| Cheteshwar Pujara | India | Royal Challengers Bangalore | 700000 |
| S Badrinath | India | Chennai Super Kings | 850000 |
| Paul Collingwood | England | Rajasthan Royals | 250000 |
| Matthew Wade | Australia | Delhi Daredevils | 100000 |
| Dan Christian | Australia | Deccan Chargers | 900000 |
| Thisara Perera | Sri Lanka | Kochi | 80000 |
| Ajit Agarkar | India | Delhi Daredevils | 210000 |
| Charl Langeveldt | South Africa | Royal Challengers Bangalore | 140000 |
| Vinay Kumar | India | Kochi | 475000 |
| Ashok Dinda | India | Delhi Daredevils | 375000 |
| Munaf Patel | India | Mumbai Indians | 700000 |
| Shaun Tait | Australia | Rajasthan Royals | 300000 |
| Umesh Yadav | India | Delhi Daredevils | 750000 |
| Clint McKay | Australia | Mumbai Indians | 110000 |
| L Balaji | India | Kolkata Knight Riders | 500000 |
| Roelof van der Merwe | South Africa | Delhi Daredevils | 50000 |
| Steve O’Keefe | Australia | Kochi | 20000 |
| Luke Pomersbasch | Australia | Royal Challengers Bangalore | 50000 |
| Venugopal Rao | India | Delhi Daredevils | 700000 |
| Scott Styris | New Zealand | Chennai Super Kings | 200000 |
| Ben Hilfenhaus | Australia | Chennai Super Kings | 100000 |
| Jaidev Unadkat | India | Kolkata Knight Riders | 250000 |
| Manpreet Gony | India | Deccan Chargers | 290000 |
| Joginder Sharma | India | Chennai Super Kings | 150000 |
| Wayne Parnell | South Africa | Pune Warriors | 160000 |
| Abhimanyu Mithun | India | Royal Challengers Bangalore | 260000 |
| Nuwan Kulasekara | Sri Lanka | Chennai Super Kings | 100000 |
| Sudeep Tyagi | India | Chennai Super Kings | 240000 |
| Suraj Randiv | Sri Lanka | Chennai Super Kings | 80000 |
| Owais Shah | England | Kochi | 200000 |
| Michael Klinger | Australia | Kochi | 75000 |
| Ryan ten Doeschate | Netherlands | Kolkata Knight Riders | 150000 |
| Mitchell Marsh | Australia | Pune Warriors | 290000 |
| Andrew McDonald | Australia | Delhi Daredevils | 80000 |
| John Hastings | Australia | Kochi | 20000 |
| Pankaj Singh | India | Rajasthan Royals | 95000 |
| Johan van der Wath | South Africa | Royal Challengers Bangalore | 95000 |
| Jerome Taylor | West Indies | Pune Warriors | 100000 |
| James Pattinson | Australia | Kolkata Knight Riders | 100000 |
| Alfonso Thomas | South Africa | Pune Warriors | 100000 |
| George Bailey | Australia | Chennai Super Kings | 50000 |
| Rilee Rossouw | South Africa | Royal Challengers Bangalore | 20000 |
| Nuwan Pradeep | Sri Lanka | Royal Challengers Bangalore | 20000 |
| Chris Lynn | Australia | Deccan Chargers | 20000 |
| Faf du Plessis | South Africa | Chennai Super Kings | 120000 |
| Jesse Ryder | New Zealand | Pune Warriors | 150000 |
| Murali Kartik | India | Pune Warriors | 400000 |
| Rusty Theron | South Africa | Deccan Chargers | 85000 |
| Travis Birt | Australia | Delhi Daredevils | 20000 |
| Dmitri Mascarenhas | England | Kings XI Punjab | 100000 |
| Jonathan Vandiar | South Africa | Royal Challengers Bangalore | 20000 |
| Moises Henriques | Australia | Mumbai Indians | 50000 |
| Colin Ingram | South Africa | Delhi Daredevils | 100000 |
| Michael Lumb | England | Deccan Chargers | 80000 |
| Nathan Rimmington | Australia | Kings XI Punjab | 20000 |
| Robert Frylinck | South Africa | Delhi Daredevils | 20000 |
| Aiden Blizzard | Australia | Mumbai Indians | 20000 |
| Mohammad Kaif | India | Royal Challenges Bangalore | 130000 |
மேலதிக விபரங்கள் விரைவில்…
சுயவிமர்சனம்
by nirujah on Jan.07, 2011, under கவிதைகள்
இது ஒரு சுய விமர்சனம். முன்னொரு காலத்தில், கிட்டத்தட்ட ஒரு 10 ஆண்டுகளுக்கு முன்னர் கவிதை என்கின்ற பெயரில ஏதாவது எழுதி, யாரிடமாவது காட்டி, அவங்களுக்கு வாசிக்க தெரியாட்டியும் வாசிச்சு காட்டி, கவிதை எப்பிடி என்டு கேட்டு அவங்க காதில இரத்தம் வர வைக்கிறது என்டா ஒரு அலாதிப் பிரியம். அப்பிடி கிட்டத்தட்ட ஒரு பத்து வருசத்துக்கு முதல் எனது நண்பன் ஒருவனுக்கு எழுதின ஒரு நீண்ட கவிதைக் கடிதம். அப்ப எனக்கு மின்னஞ்சல் இருக்கேல்ல. கையால தான் எழுதினனான். நேற்று மீண்டும் மின்னஞ்சலில வந்தது.
இப்ப வாசிக்க சில இடங்களில சிரிப்புத் தான் வருது. இது எழுதிய கால கட்டத்தில், அதிகமாக வைரமுத்துவையும் பா. விஜய் ஐயும் வாசித்துக்கொண்டிருந்ததாலோ என்னவோ, அந்த சாயல் அப்படியே பல இடங்களில் எனக்கே தெரிகிறது. இது எனது நன்பன் உயர்தரம் படித்துக்கொண்டிருக்கும் போது அவர் வாழ்வில் நடந்த சம்பவம். காதல் எத்தனை பேரை கிழித்துபோடுகின்றது என்பதற்கு இது ஒரு சாட்சி.
இன்று ஒருவரைக் காதலித்து விட்டு நாளை இன்னொருவரை காதலிக்கும் எத்தனையோ ஆண்/பெண்களைப் பார்த்த எனக்கு இவனது காதல் இப்போதும் விசித்திரமாகப்படுகின்றது. அவனுடன் அவனது இக்காதலைப்பற்றை பேசும் போதெல்லாம் அவனைத் திட்டித் தீர்த்தாலும் அவன் மேல் எனக்கு அளவு கடந்த அன்பும் மதிப்பும் உள்ளது. ஆனால் அவன் தான் நெஞ்சில் அவளது பெயரைப் பச்சைகுத்திக்கொண்டு இன்னமும் வாழ்கின்றான். இப்போதும் அதைப்பற்றை ஏதாவது பேச விளைந்தாலே அவனது குரல் தளதளப்பதையும், கண்கள் கசிவதையும் நான் அவதானிக்க தவறியதில்லை. ஆனால், அந்த பெண் தான் சந்தர்ப்ப சூழ்நிலையாலோ என்னவோ தற்போது வேறு ஒருவரை மணந்து விட்டாள்.

இனி கவிதை ( ரெம்பவே கஷ்டப்பட்டு மீண்டும் தட்டச்சு செய்தது)
கடைசியா புடுங்கிய ஆணி – Tamil(Unicode) Characters in Java basedweb application [5.1.2011]
by nirujah on Jan.06, 2011, under ஒருங்குறி, கணணி, ஜாவா
கடந்த சில வாரங்களாக எனக்கு இருந்த மிகப் பெரிய ஆணியை ஒருமாதிரி இன்று புடுங்கியாகிவிட்டது. நான் இப்ப வேலை செய்யிறது ஒரு பன்மொழிப் பயன்பாடு உள்ள ஒரு web application. தற்போது ஆங்கிலம் தமிழ் மற்றும் சிங்களம் ஆகியன பயன்படுத்தப்பட்டாலும், இதில கிட்டத்தட்ட 5க்கு மேற்பட்ட இந்திய மொழிகளைக் கொண்டு தரவு உள்ளீடு செய்ய வேண்டி இருக்கும்.
ஆக தரவு எல்லாமே ஒருங்குறியில தான் உள்ளீடு செய்ய வேணும். எங்கட application முழுக்க முழுக்க java வில தான் எழுதினது. Struts, Hibernate மற்றும் Spring ஆகிய framework பயன்படுத்தப்பட்டுள்ளது. database ஆக mysql5.1 பாவிக்கிறம். இந்த database உருவாக்கேக்க character set = utf8 உம் collate = utf8_generic கும் பயன்படுத்தியிருக்கிறம். இதே போல தான் table உருவாக்கேக்க எல்லாம் மறக்காம utf8 பாவிச்சனாங்கள். தவிர database connection pooling க்காக proxool என்டிர API யும் பாவிக்கிறம். அதிலயும் connection settings எல்லாம் சரியாதான் இருந்திச்சு.

<driver-url>jdbc:mysql://localhost:3306/mboxx?useUnicode=true&characterEncoding=UTF-8</driver-url><driver-class>com.mysql.jdbc.Driver</driver-class><driver-url>jdbc:mysql://localhost:3306/mboxx?useUnicode=true&characterEncoding=UTF-8</driver-url> <driver-class>com.mysql.jdbc.Driver</driver-class>
<%@ page contentType=”text/html;charset=UTF-8″ import=”java.util.*” language=”java” pageEncoding=”UTF-8″ %>மற்றும்<meta http-equiv=”Content-type” content=”text/html; charset=utf-8″/>
முதலாவதா இருக்கிற வரியை [jst tag], jsp page இன்டை தொடக்கத்திலையும், அடுத்த வரியை html page இன்டை head tag க்கு உள்ளையும் எழுதி இருந்தனான். அது மட்டுமில்ல, servlet ல வாற request object ஐ பயன்படுத்த முதல் அதுக்கும் request.setCharacterEncoding(“UTF-8″); என்ட encoding எல்லாம் குடுத்தனான். ஆனா பாருங்கோ, web page ல தமிழ்ழை தட்டி சேமிக்க போனா, மாலவன௠இப்பிடி தான் கோழி கோழி முட்டை முட்டையா எழுத்துக்கள் வந்திச்சு. இதுவே நேரா database client ஐ பயன்படுத்தி, database ல தமிழில தட்டீட்டு web application ஐ பாவிச்சு பாத்தா அது சரியா தமிழில தெரிஞ்சிச்சு. என்னடா இது வில்லங்கம் பிடிச்ச ஆணியா கிடக்கு எண்டு கூகுல் சாமிய போட்டு உலுப்புலுப்பெண்டு 3 கிழமையா உலுப்பியும் ஒண்டும் கொட்டுண்டேல்ல. ஒரு கட்டத்தில இதுக்கு வேற வழி எதாவது இருக்கா எண்டு பாத்து தற்காலிகமா ஒரு தீர்வு குடுத்துட்டு மற்ற ஆணிகளைப்பாக்க போட்டன்.<filter><filter-name>encodingFilter</filter-name><filter-class>org.springframework.web.filter.CharacterEncodingFilter</filter-class><init-param><param-name>encoding</param-name><param-value>UTF-8</param-value></init-param><init-param><param-name>forceEncoding</param-name><param-value>true</param-value></init-param></filter><filter-mapping><filter-name>encodingFilter</filter-name><url-pattern>/*</url-pattern></filter-mapping>
இப்பிடி ஒரு வழியா வேலைசெய்ய வச்சாச்சு. இப்ப, request.characterEncoding, எல்லாம் தேவையில்லை. எல்லாம் சரியா வேலைசெய்யுது.![]()

