2010 ஏ புறப்படு
by nirujah on Dec.31, 2010, under அனுபவங்கள், பதிவுலகம்
மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்.
டேய்…! யார்ரா அங்க… 2 நாளைக்கு லண்டன்ல மழை பெய்யபோகுது…! கொட எல்லாம் வெளியில எடுத்து தூச கீச தட்டி வைங்கடா…! அண்ண நாளைக்கு தோட்டத்துக்கு போகணும்..! மொக்கை
மறுபடியும் பசிக்குதே…! இது வரை முகப்புத்தகத்தில் இறுதியாக உள்ள நிலை.
முகப்புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வபோது கவிதை என்ற பெயரில் போட்டவை:
என் உணவு வேளைகளின்
புரையேறும் நிமிடங்களைக் கேட்டுப்பார்…!
உன் நினைவலைகள் என்னைத்
தாக்கட்டுமே என்று நீர் அருந்துவதே இல்லை…!
இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்….
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்செல்கிறாயே…..???
கடலலையே….!!!
நீயும் பெண்ணின் அம்சமோ…
தெளிந்த வானமாய் ஓர் மனம் வேண்டும்….!
அதில் ஒரே சூரியனாய் நீ வேண்டும்.
உன்னொளி பெற்று நான் மதியாக வேண்டும்…!
பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே.மட்டுமல்ல
காதலின் பொழுது போக்கும் கூட…
It’s really hard for me to accept….!
You were with me when I was stressed…!
When I needed some one…!
When I wanted to pass my time…!
But…. Things has to change…!
And you cant be with me any more….!
நம்முடைய முதல் சந்திப்பு
என்னுடைய முதல் தோல்வியின்
பரிசாய்க் கிடைத்தது..! அன்று முதல்,
நம் முதல் ஸ்பரிசம்,
என் உதடுகளில் நம்முடைய முதல் முத்தம்..!
அந்த நறுமணம்..!
எனக்குத் தெரியும்..;
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும் எனக்காக நீ மரணித்தாய் என்று..!
காற்றுடன் கலந்த அந்த கடற்கரைப் பொழுதுகள்…
கல்லூரியின் பின் புறம்…!
சாரலாய் பெய்த மழையின்
மண்வாசத்தோடு சேர்ந்த உன் அருகாமை;
எப்படித்தான் முடியுமோ உன்னைவிட்டு நீங்க என்னால்..!
என் 10ம் வயதில் திருட்டுத்தனமாய் செய்ய முயன்றாலும்…!
இருபதின் ஆரம்பத்தில் என் கன்னி கழித்தவள் நீ தான்….!
அன்று முதல் எத்தனை பேர்…! விதம் விதமாய்…!
நீயாய்…, உன் தோழிகளாய்…, சகோதரிகளாய்…,
உள்நாடு… வெளிநாடு… என எத்தனை வகைகளாய்…!
கையில் ஒன்றுமே இல்லாத போது நன்பர்களிடன்
கடனாய் என… நீ ஏதாவது ஒரு உருவத்தில் தினம் கலந்துகொண்டே இருந்தாய்…!
அன்புள்ள அத்தை மகளே…! அழகே நினைவிருக்கா…!
உன் அத்தான் சீமை சென்று ஆறு மாசம் ஓடிபோச்சே…!
இத்தனை நாள் பிரிந்திருந்தும்
கழுதை உன்னை மறக்கலையே…!
இரண்டு நாள் கதைக்காட்டி நீயாரென்று கேக்கிறியே…!
பாத்தவுடன் சோழி செய்ய காத்திருடி கண்ணழகே…!
வாழ்க்கை வெறுக்குதடி…
சாகத் தோணுதடி…
சுற்றம் சலிக்குதடி…
மெத்தப் புளிக்குதடி
என்றும் நீ சொல்வது போல்…
எல்லாம் போலியடி…
போலிக்குள் ஒருவனாக…
வாழ மன ஒக்கவில்லை…
எல்லோர்க்கும் நானொருவன்…
வெறும் துருப்புச் சீடாய் பேனேனடி…
தம் வேலை முடிந்தவுடன்…
தூக்கி எறியும் உலகமடி…
அமேசனின் நீரேந்து பிரதேசங்களின்
மழைபோல் முத்தங்கள் கிடைக்கின்ற நாட்டில்…,
சகாராவின் சாரல் கூட
கிடைக்க முடியாதபடி செய்தவளே…
அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.

9 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
January 2nd, 2011 on 12:15 pm2010 ஏ புறப்படு « செவ்வானச் சிதறல்கள்……
மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்…

December 31st, 2010 on 6:18 pm
தலை…நீங்க எங்கையோ போயீட்டிங்க..
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்
December 31st, 2010 on 6:28 pm
@vathees: எயாடெல் வேலையுது போல? அரட்டையில ரெம்ப சூடா இருக்கிறீங்களே? ஏண்ண?
December 31st, 2010 on 8:17 pm
December 31st, 2010 on 8:39 pm
ஆமாய்யா ஏயாடெல் ரொம்ப நல்லா வேலை செய்யுது இங்க நானே ரொம்ப கடுப்பில இருக்கிறன் நீங்க வேற சூடாக்குறீங்க…டவுண்லோட் வேகம் 2-10 KB…3g இணைப்புக்கள் இன்னும் யாழ்ப்பாணத்திற்கு வழங்கப்படவில்லையாம் மிகவிரைவில் வழங்குவோமாம் வாடிக்கையாளர் சேவை நிலையத்தில் இருந்து ஒரு பெண் பிரகாசமாக தெரிவிக்கின்றார் பார்ப்போம் அடுத்தமுரை வரும்போதாவது வேலைசெய்கின்றதா என்று
December 31st, 2010 on 8:51 pm
இனிய புது வருட வாழ்த்துக்கள் அண்ணா
December 31st, 2010 on 11:05 pm
தங்களுக்கும், தங்கள் எண்ணங்கள்போலவே அடுத்த அண்டுகள் அமையவும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மிலேனியம் வந்து பத்து ஆண்டுகள் கடந்துபோச்சு இல்லை???? இந்த பத்து ஆண்டுகளும் படுவேகமாக சென்றதுபோல ஒரு உணர்வு!
December 31st, 2010 on 11:21 pm
எரிமலை எப்படி வெடிக்கும்?
பழையவற்றை திரும்பத் தூசு தட்டிப் பார்ப்பதிலும் ஒரு இன்பம் தான்.
கும்மிகள் எல்லாம் ஞாபகம் வருகின்றன.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
December 31st, 2010 on 11:22 pm
எரிமலை எப்படி வெடிக்கும் என்ற ஸ்ரேற்றஸில் கும்மியது ஞாபகம் இருக்கிறது, ஆனால் மறந்துவிட்டேன்.
திரும்பப் போய் வாசிக்கிறேன்.
December 31st, 2010 on 11:36 pm
//உண்மையாவே மனம் நொந்து போட்டது. ஒரு கண்ணாடி வாங்கி அடுத்த நாள் போடுவம் என்டு இருக்க, அண்டைக்கு முழுக்க மழை//
ROFL..:P
இனிய புதுவருட வாழ்த்துகள் அண்ணா