பதிவர் பொங்கல்
by nirujah on Dec.31, 2010, under பதிவுலகம், வேறு
எத்தனை முறை சிலருடன் பழகினாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசவேண்டும் போல் தோன்றும். சில நேரம் கடந்த 25 ஆண்டுகளாக என் தேடலில் சிக்காத வட்டம் ஒன்றுடன் நான் இப்போது பழக்கிக்கொண்டிருக்கின்றேனோ தெரியாது. ஆனால் தொடர்ந்து பேசவேண்டும். பல விடயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டிருக்கின்றது.
“காரணம் இருக்காது ஆனால் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது” காதலிப்பவர்கள் பேசக்கேட்டிருக்கின்றேன். இதுவும் அப்படியோ தெரியவில்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள இந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல மனம் வரவில்லை. இந்த மகிழ்ச்சி மனதுக்கு இதமாக இருக்கின்றது. என்னுடைய இயந்திரமயமான வாழ்வில் தொன்றலாய் ஊடுருவியுள்ளது.
இவ்வாறெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த வேளை தான் பொங்கல் பற்றிய எண்ணம்
தோன்றியது. பதிவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏன் வருகின்ற பொங்கலைக் கொண்டாடக் கூடாது. ஏற்கனவே பல அதிகார மையங்கள் முளைத்து நிற்கின்ற வேளையில் இதற்கும் அதிகார மையச் சாயம் பூசுவதற்கோ அல்லது மதச் சாயம் பூசுவதற்கோ பலர் வருவார்கள் என்பது எனக்கு தெரியும். பொதுவாகவே எனக்கு மத நம்பிக்கை இல்லை. சமயங்களின் ஊடாக இறைவனுடன் பேசும் பக்குவமும் எனக்கு இல்லை. பிறப்பால் இந்துவான எனக்கு சித்திரைப் புத்தாண்டிலோ, தீபாவளியிலோ பெரிதாக ஈடுபாடு கிடையாது. தவிர, எனக்கு கிறீஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். இஸ்லாமிய நண்பர்களும் இருக்கின்றார்கள். நத்தாருக்கு அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றேன். நோன்பு தினங்களில் நண்பர்கள் வீட்டில் நோன்புக்கஞ்சியும் குடித்திருக்கின்றேன். அதிகார மையத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அப்படி ஒன்றும் உண்மையாக இல்லை.
மற்றவர்கள் பொங்கலை எப்படிப் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால் நான் பொங்கலை ஒரு தமிழ் பண்டிகையாகவே பார்க்கின்றேன். இதை யார் வேண்டுமென்றாலும் கொண்டாடலாம். தவிர, நான் இந்தியாவில் இருந்த சமயத்தில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கூட பொங்கலை சிறப்பாக கொண்டாடியதை நேரிலே பார்த்திருக்கின்றேன். நெகிழ்ந்திருக்கின்றேன். ஆக, தமிழ் பதிவர்கள் என்ற வட்டத்துக்குள் இருக்கும் நாமும் பொங்கலை சிறப்பாக கொண்டாட முடியும்.
இதில் பல நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நான் அறிவேன். அனேகமாக அனைவரும் எமது வீடுகளில் பொங்குவோம். வீடுகளுக்கு விருந்தினர்கள் வருவார்கள். நாம் எமது அயலவர், உற்றார், உறவினர் வீடுகளுக்கு செல்வோம். இப்படி பல்வேறு பட்ட நிகழ்வுகளிலே நாம் அனைவரும் ஈடுபவோம். இருந்தாலும், முடிந்தால் 15ம் திகதி காலைப் பொழுதில், நாம் அனைவரும் சேர்ந்து ஓர் இடத்தில் பொங்கலைக் கொண்டாடினால் என்ன? ஒத்த கருத்துள்ளோர் சேர்ந்தாலே போதும். இதைச் சிறப்பாக கொண்டாடியதாகவும் இருக்கும். நாம் மீண்டும் ஒருமுறை சந்தித்ததாகவும் இருக்கும். முடிவை உங்கள் கைகளில் விட்டுவிடுகின்றேன்.
18 Comments for this entry
1 Trackback or Pingback for this entry
-
Indli.com
December 31st, 2010 on 7:58 amபதிவர் பொங்கல் « செவ்வானச் சிதறல்கள்……
இவ்வாறெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த வேளை தான் பொங்கல் பற்றிய எண்ணம் தோன்றியது. பதிவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏன் வருகின்ற பொங்கலைக் கொண்டாடக் கூடாது. ஏற்கனவே பல அதிகார மையங்கள் முளைத்து நிற்கின்ற வேளையில் இதற்கும் அதிகார மையச் சாயம் பூசுவத…

December 31st, 2010 on 7:52 am
அட பொங்கலோ பொங்கல் நான் வெட்டியா இருந்தால் வருவேன், ஆனா அடுத்த வருடத்திலியிருந்து நான் கூடுதலாக பிசி..:P
நல்லது பொங்குவோம்..:D
December 31st, 2010 on 7:54 am
ஒத்த கருத்துள்ளோர் சேர்ந்தாலே போதும். இதைச் சிறப்பாக கொண்டாடியதாகவும் இருக்கும்.
December 31st, 2010 on 8:14 am
அடுத்த நாள் தான் எனக்குப் பொருத்தமானது அதனால் அடுத்த நாள் வைத்தால் தான் நான் வருவேன்…
தங்களுக்கு எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரம்..
அன்புச் சகோதரன்…
மதி.சுதா.
அழியா வடுக்கள்
December 31st, 2010 on 8:23 am
வாவ்.. அதிகார மையம் என்றால் அதிகார மையம் தான்
அருமையான ஐடியா.. ஒரு இனிமையான ஒன்று கூடலாக இருக்கும்.
நான் தயார்:) நல்லா இருக்கும். எங்கள் அலுவலகத்தால் எந்தவொரு பொங்கல் விழாவும் ஏற்பாடு செய்யப்படாவிட்டால் நிச்சயம் நான் இருப்பேன்.
December 31st, 2010 on 8:41 am
சில நேரம் கடந்த 25 ஆண்டுகளாக//
அடி ஆத்தாடி வயசு ஆச்சா?
பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ள நானும் தயார். புத்தாண்டு வாழ்த்துக்கள்…
December 31st, 2010 on 8:45 am
அதிகார மையம் வாழ்க.
அருமையான திட்டம் தான்.
நான் வெட்டியாக இருந்தால் நிச்சயமாக கலந்துகொள்வேன்.
December 31st, 2010 on 8:46 am
தலைவரே,
follow up comments கு வழியேதும் இல்லையோ?
December 31st, 2010 on 9:23 am
பொங்கலோ பொங்கல்
December 31st, 2010 on 9:24 am
கோபி, தற்போது முடியும் என்று நினைக்கின்றேன். முயற்சித்து பார்க்கவும்
December 31st, 2010 on 9:25 am
நல்ல ஒரு முயற்சி மாலவன் அண்ணே மீண்டும் சந்திப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்
அதிகார மையம் என்றால் என்னவென்று இன்னமும் எனக்கு விளங்கவிலை அகராதி எல்லாத்தையும் தேடிப்பார்த்துவிட்டன் அதிகாரமையத்திற்கு சரியான விளக்கம் கிடைக்கவில்லை யாருக்காவது தெரிஞ்சால் என்னுடைய தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்
விளக்கம் தெரியாட்டிலும் பரவாயில்லை அதிகார மையத்தலைவர் நிரு….ஜா சாரி மாலவன் வாழ்க 16ம் திகதிதானே பொங்கலை ஏற்பாடு செய்யப்போகிறீர்கள்…
December 31st, 2010 on 9:33 am
December 31st, 2010 on 2:55 pm
நானும் வருவேன்…
சுடுசோறு சுதா, அடுத்த நாள் மாட்டுப் பொங்கல், நீங்கள் வந்தால் உங்களுக்கே பொங்கிப் படைப்போம்.
சுடுசோறு சுதாவுக்கு சுடுபொங்கல் படைப்போம்
December 31st, 2010 on 3:15 pm
அருமையான யோசனை. அதிகாரமைம் என்றால் சும்மாவா என்ன? பொங்கலன்று கொழும்பில் இருந்தால் நிச்சயமாகக் கலந்துகொள்கிறேன். இனிய புதுவருட வாழ்த்துகள்
December 31st, 2010 on 3:29 pm
முடிகிறது தலைவரே….
December 31st, 2010 on 4:55 pm
நல்ல யோசனை தான் தலைவரே ஆனால் நடைமுறை சிக்கல்கள் இருகின்றன, பொங்கலை பொங்கலன்று கொண்டாடாமல் வேறு ஒரு தினத்தில் நாம் அனைவரும் இணைந்து கொண்டலாமே, அப்போ தூர உள்ள நாங்களும் உங்களோடு இணைந்து கொள்ளலாம், இது எனது கருத்து மட்டுமே
December 31st, 2010 on 8:43 pm
பொங்கலோ பொங்கல் நான் பிசி ஆனாலும் பதிவர்களுடன் இணைய நேரம் ஒதுக்க காத்திருக்கிறேன்
December 31st, 2010 on 11:42 pm
நான் அந்த நாளில் யாழ்ப்பாணம் செல்வதால் வர முடியாது! நீங்கள் எல்லோரும் சேர்ந்து கொண்டாடுங்கள்!
January 3rd, 2011 on 10:34 am
nice idea………….
ya its true ITS A TAMIL FESTIVAL!!!!!!!
hey malz in behalf of me keep 1 more pot …and mak pongal!!!!!!!