செவ்வானச் சிதறல்கள்…

Archive for December, 2010

2010 ஏ புறப்படு

by on Dec.31, 2010, under அனுபவங்கள், பதிவுலகம்

மில்லேனியம் தனது முதல் தசத்தை இனிதே இன்று நிறைவு செய்கின்றது. தனிப்பட்ட முறையில் இவ்வாண்டு பல்வேறுபட்ட பரந்த அனுபவங்களை எனக்கு கொடுத்திருந்தது. இந்த தசாப்ப்ததின் இறுதிப் பதிவை எனது முகப்புத்தகதில் நான் போட்ட நிலைகளுள் சிலவற்றை மீண்டு முடிக்கின்றேன்.

நான் இராவணன் பரம்பரை… :D எதுக்காக போட்டன் எண்டு ஞாபகம் இல்லை. முகப்புத்தகதில் ஒருவருடன் ஆரிய திராவிட சண்டையின் உச்சக்கட்டதில் வந்தது என்று நினைக்கின்றேன்.

Why da hell im adicted to Prawn Sandwich…!!! இங்கிலாந்தில் இருக்கும் போது எனக்கு இறால் வைத்த sandwich அதிகமாக பிடிக்கும். அப்போது போட்டது
அடடா….! காலமை சாப்பிட மறந்து போச்சே…! மாலவா அவ்வளவு சீக்கிரம் விஞ்ஞானி ஆகீட்டியா….! :O கொஞ்சம் மும்முரமாக, இறுதிப்பரீட்ச்சைக்கு படித்த போது (நம்புங்க)

டேய்…! யார்ரா அங்க… 2 நாளைக்கு லண்டன்ல மழை பெய்யபோகுது…! கொட எல்லாம் வெளியில எடுத்து தூச கீச தட்டி வைங்கடா…! அண்ண நாளைக்கு தோட்டத்துக்கு போகணும்..!
மொக்கை
கணக்கு வண்டியைக் கட்டுடா மேற்கிந்தியதீவுக்கு….! அந்த புதுப்பொடியன் சந்தமல் என்னமா அடிக்கிறான்….! முழு மொக்கை. ஆனால் சந்திமால் முதலாவது போட்டியில் சதம் அடிக்கும் போது வியந்து போட்டது.
ஆத்தா… நான் ஊட்டுக்கு வாறன்…! கோழிக்குழம்பும் நெத்தலிப் பொரியலும் செஞ்சு வை ஆத்தா…! அப்பிடியே… லட்சுமி கன்று போட்டதா கேள்விப்பட்டன். முதல் பால் எழுத்து வறுத்து வை…! :) :) :) :) :)
கோடைக்கு பந்தா காட்ட எண்டு கண்ணாடி வாங்கினா…. இண்டைக்கெண்டு பாத்து சூரியனையே காணேல்ல…! Mr. கதிரவன்…. நீருமா….! உண்மையாவே மனம் நொந்து போட்டது. ஒரு கண்ணாடி வாங்கி அடுத்த நாள் போடுவம் என்டு இருக்க, அண்டைக்கு முழுக்க மழை
எரிமலை எப்படி வெடிக்கும்….! சிங்கம் படம் பாத்திட்டு வந்து போட்டது. எனக்கு தெரிந்த வரை, முதல் முதலில் கோபியுடன் கதைக்க சந்தர்ப்பத்தை ஏற்படுத்திய நிலை
ஆத்தா…. நான் மறுபடியும் பரீட்சையில பாஸாகிட்டன்….!
அடியாத்தி….! நம்ம ஊர் கச்சான் காத்து இங்கையும் வீசுது…! வேலை நிமித்தம், லண்டனில் இருந்து லிவர்பூல் போய் இருந்த வேளை அங்கு வீசிய காற்றைப் பார்த்து
ம்…! இந்த ஊரிலையும் மழை தண்ணியாத்தாம்பா பெய்யுது… முதன்முதலில் இங்கிலாந்தின் கொட்டும் மழையில் நனைந்த போது

பட்டணத்துக்கு போறேனுங்கோ….
Oh my lord…! cashier ண்ட Till ல Facebook பாக்க வேணும் எண்டு அடம்பிடிக்கிற customer ஐ எனக்கு குடுத்திருக்கிறியே…! உனக்கே கொஞ்டம் ஓவரா தெரியல….! வேலை செய்த இடத்தில் ஓர் அனுபவம்
Virginity is not dignity, its lack of opportunity என்னை இந்த வருடத்தில் அதிகம் கவர்ந்த மேற்கோள்

நீ மட்டும் மாறிட்டேயடி மல்லிகா…! இலங்கை வ்ந்த பின் அதிகம் முனுமுனுத்த பாடல்
Azithromyzin 500mg and another 7 tablets….! இலங்கை வந்து அடுத்த வாரமே போட்டு உலுப்பிய காச்சலுடன் கூடிய இருமல்

ஓசியில சாப்பிடுவம் எண்டா யாருமே treat குடுக்க மாட்டெங்கிறாங்க…. வழமையான ஓர் ஓய்வு நாள்
என் இனிய நரகாசுரனே…..! உனக்கு எனது வீரவணக்கங்கள்…! தீபாவளி
ஏனைய்யா சிமித்..! எல்லாரும் அவுடாகினா மானப்பிரச்சனையா? அந்தாள் 278ல இருக்கேக்க கண்டிப்பா ஆட்டத்தை நிப்பாட்டோனுமா? 300 அடிக்க விட்டிருக்கலாம் தானே? மற்றப்பக்கம்
இன்னொருத்தன் வடிவா தானே விளையாடினவன்…! #பொறாமை
நீண்ட பிரயாணம், மழை, பழைய நண்பியுடன் Barista வில் தேநீர், நீண்ட நாட்களுக்கு பின் வாங்கிய பா. விஜய்யின் கவிதைத்தொகுப்புகள், Hotshot இல் ஹர்பஜனின் 2வது சதத்தை பார்த்த படி மதிய உணவு….! #நிகழ்வுகள் நிறைந்த நாள்
ங்ய்யால….! சீக்கிரம் அவுட்டாகுங்கடா… மனிசருக்கு நித்திரை வருது… இங்கிலாந்தின் முதல் ஆஷஸ் வெற்றி
நான் உயர்தர பரீட்சை எடுக்கேல்ல; எனக்கு இன்னும் 2 வருசம் இருக்கு; இப்ப தானே சாதாரண தரம் எழுதி இருக்கிறன் – தயவு செய்து பரீட்சை முடிவு கேட்டு தொல்லை தர வேண்டாம்
“கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்” எண்டுறாங்களே, எனதருமை வைத்திய நண்பர்களே, அது என்ன இருமல் சிறப்பா இல்ல தடிமன் காச்சல் வந்தா குடுக்கிற சிறப்பா? கொஞ்சம் தெளிவா தான் சொல்லுங்களேன்…!
எத்தனை 5நட்சத்திர ஹோட்டலில சாப்பிட்டாலும், வீட்டில வந்து அம்மா சுட்ட ரொட்டியும் சம்பலும் சாப்பிடுறது தனி ருசி தான்.
மறுபடியும் பசிக்குதே…!


மறுபடியும் பசிக்குதே…! இது வரை முகப்புத்தகத்தில் இறுதியாக உள்ள நிலை.

முகப்புத்தகத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் அவ்வபோது கவிதை என்ற பெயரில் போட்டவை:

என் உணவு வேளைகளின்
புரையேறும் நிமிடங்களைக் கேட்டுப்பார்…!
உன் நினைவலைகள் என்னைத்
தாக்கட்டுமே என்று நீர் அருந்துவதே இல்லை…!

இத்தனை தென்னைமரங்களும்
காத்துத்தவம் கிடந்தும்….
அருகே வருவதாய் வந்து,
எட்டி மட்டும் பார்த்துச்செல்கிறாயே…..???
கடலலையே….!!!
நீயும் பெண்ணின் அம்சமோ…

தெளிந்த வானமாய் ஓர் மனம் வேண்டும்….!
அதில் ஒரே சூரியனாய் நீ வேண்டும்.
உன்னொளி பெற்று நான் மதியாக வேண்டும்…!

பழகிப் பிரியும் துயரமெல்லாம்
காதல் வழக்கமே.மட்டுமல்ல
காதலின் பொழுது போக்கும் கூட…

It’s really hard for me to accept….!
You were with me when I was stressed…!
When I needed some one…!
When I wanted to pass my time…!
But…. Things has to change…!
And you cant be with me any more….!

நம்முடைய முதல் சந்திப்பு
என்னுடைய முதல் தோல்வியின்
பரிசாய்க் கிடைத்தது..! அன்று முதல்,
நம் முதல் ஸ்பரிசம்,
என் உதடுகளில் நம்முடைய முதல் முத்தம்..!
அந்த நறுமணம்..!
எனக்குத் தெரியும்..;
நம் ஒவ்வொரு சந்திப்புகளிலும் எனக்காக நீ மரணித்தாய் என்று..!
காற்றுடன் கலந்த அந்த கடற்கரைப் பொழுதுகள்…
கல்லூரியின் பின் புறம்…!
சாரலாய் பெய்த மழையின்
மண்வாசத்தோடு சேர்ந்த உன் அருகாமை;
எப்படித்தான் முடியுமோ உன்னைவிட்டு நீங்க என்னால்..!

என் 10ம் வயதில் திருட்டுத்தனமாய் செய்ய முயன்றாலும்…!
இருபதின் ஆரம்பத்தில் என் கன்னி கழித்தவள் நீ தான்….!
அன்று முதல் எத்தனை பேர்…! விதம் விதமாய்…!
நீயாய்…, உன் தோழிகளாய்…, சகோதரிகளாய்…,
உள்நாடு… வெளிநாடு… என எத்தனை வகைகளாய்…!
கையில் ஒன்றுமே இல்லாத போது நன்பர்களிடன்
கடனாய் என… நீ ஏதாவது ஒரு உருவத்தில் தினம் கலந்துகொண்டே இருந்தாய்…!

அன்புள்ள அத்தை மகளே…! அழகே நினைவிருக்கா…!
உன் அத்தான் சீமை சென்று ஆறு மாசம் ஓடிபோச்சே…!
இத்தனை நாள் பிரிந்திருந்தும்
கழுதை உன்னை மறக்கலையே…!

இரண்டு நாள் கதைக்காட்டி நீயாரென்று கேக்கிறியே…!
பாத்தவுடன் சோழி செய்ய காத்திருடி கண்ணழகே…!

வாழ்க்கை வெறுக்குதடி…
சாகத் தோணுதடி…
சுற்றம் சலிக்குதடி…
மெத்தப் புளிக்குதடி
என்றும் நீ சொல்வது போல்…
எல்லாம் போலியடி…
போலிக்குள் ஒருவனாக…
வாழ மன ஒக்கவில்லை…
எல்லோர்க்கும் நானொருவன்…
வெறும் துருப்புச் சீடாய் பேனேனடி…
தம் வேலை முடிந்தவுடன்…
தூக்கி எறியும் உலகமடி…

அமேசனின் நீரேந்து பிரதேசங்களின்
மழைபோல் முத்தங்கள் கிடைக்கின்ற நாட்டில்…,
சகாராவின் சாரல் கூட
கிடைக்க முடியாதபடி செய்தவளே…

அனைவருக்கும் எனது ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.


10 Comments :, , , , , more...

பதிவர் பொங்கல்

by on Dec.31, 2010, under பதிவுலகம், வேறு

எத்தனை முறை சிலருடன் பழகினாலும் சலிக்காது. மீண்டும் மீண்டும் அவர்களுடன் பேசவேண்டும் போல் தோன்றும். சில நேரம் கடந்த 25 ஆண்டுகளாக என் தேடலில் சிக்காத வட்டம் ஒன்றுடன் நான் இப்போது பழக்கிக்கொண்டிருக்கின்றேனோ தெரியாது. ஆனால் தொடர்ந்து பேசவேண்டும். பல விடயங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும் என்று மனம் துடித்துக்கொண்டிருக்கின்றது.

“காரணம் இருக்காது ஆனால் பார்க்கவேண்டும் போல் இருக்கிறது” காதலிப்பவர்கள் பேசக்கேட்டிருக்கின்றேன். இதுவும் அப்படியோ தெரியவில்லை. ஆனால் தற்போது கிடைத்துள்ள இந்த வட்டத்தை விட்டு வெளியே செல்ல மனம் வரவில்லை. இந்த மகிழ்ச்சி மனதுக்கு இதமாக இருக்கின்றது. என்னுடைய இயந்திரமயமான வாழ்வில் தொன்றலாய் ஊடுருவியுள்ளது.

இவ்வாறெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த வேளை தான் பொங்கல் பற்றிய எண்ணம் தோன்றியது. பதிவர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து ஏன் வருகின்ற பொங்கலைக் கொண்டாடக் கூடாது. ஏற்கனவே பல அதிகார மையங்கள் முளைத்து நிற்கின்ற வேளையில் இதற்கும் அதிகார மையச் சாயம் பூசுவதற்கோ அல்லது மதச் சாயம் பூசுவதற்கோ பலர் வருவார்கள் என்பது எனக்கு தெரியும். பொதுவாகவே எனக்கு மத நம்பிக்கை இல்லை. சமயங்களின் ஊடாக இறைவனுடன் பேசும் பக்குவமும் எனக்கு இல்லை. பிறப்பால் இந்துவான எனக்கு சித்திரைப் புத்தாண்டிலோ, தீபாவளியிலோ பெரிதாக ஈடுபாடு கிடையாது. தவிர, எனக்கு கிறீஸ்தவ நண்பர்களும் இருக்கிறார்கள். இஸ்லாமிய நண்பர்களும் இருக்கின்றார்கள். நத்தாருக்கு அவர்களின் கொண்டாட்டங்களில் பங்கெடுத்திருக்கின்றேன். நோன்பு தினங்களில் நண்பர்கள் வீட்டில் நோன்புக்கஞ்சியும் குடித்திருக்கின்றேன். அதிகார மையத்தைப் பற்றி நான் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அப்படி ஒன்றும் உண்மையாக இல்லை.

மற்றவர்கள் பொங்கலை எப்படிப் பார்க்கின்றார்களோ தெரியாது. ஆனால் நான் பொங்கலை ஒரு தமிழ் பண்டிகையாகவே பார்க்கின்றேன். இதை யார் வேண்டுமென்றாலும் கொண்டாடலாம். தவிர, நான் இந்தியாவில் இருந்த சமயத்தில், கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் கூட பொங்கலை சிறப்பாக கொண்டாடியதை நேரிலே பார்த்திருக்கின்றேன். நெகிழ்ந்திருக்கின்றேன். ஆக, தமிழ் பதிவர்கள் என்ற வட்டத்துக்குள் இருக்கும் நாமும் பொங்கலை சிறப்பாக கொண்டாட முடியும்.

இதில் பல நடைமுறைச்சிக்கல்கள் இருப்பதை நான் அறிவேன். அனேகமாக அனைவரும் எமது வீடுகளில் பொங்குவோம்.  வீடுகளுக்கு விருந்தினர்கள் வருவார்கள். நாம் எமது அயலவர், உற்றார், உறவினர் வீடுகளுக்கு செல்வோம். இப்படி பல்வேறு பட்ட நிகழ்வுகளிலே நாம் அனைவரும் ஈடுபவோம். இருந்தாலும், முடிந்தால் 15ம் திகதி காலைப் பொழுதில், நாம் அனைவரும் சேர்ந்து ஓர் இடத்தில் பொங்கலைக் கொண்டாடினால் என்ன? ஒத்த கருத்துள்ளோர் சேர்ந்தாலே போதும். இதைச் சிறப்பாக கொண்டாடியதாகவும் இருக்கும். நாம் மீண்டும் ஒருமுறை சந்தித்ததாகவும் இருக்கும். முடிவை உங்கள் கைகளில் விட்டுவிடுகின்றேன்.

19 Comments :, , , , , , more...

இரயில் பயணத்தில் ஓர் கிளிநொச்சி அனுபவம்

by on Dec.15, 2010, under அனுபவங்கள், ஈழம்

இது வரை நான் எழுதிய பதிவுகளில் இது சற்றே வித்தியாசமானது. தற்போது 15ம் திகதி, மார்கழி மாதம் 2010, அதிகாலை 2:42. கொழும்பிலிருந்து வவுனியா மற்றும் தாண்டிக்குளம் நோக்கிச் செல்லும் இரவுத் தபால் தொடரூர்ந்தில் மூன்றாம் வகுப்பு இருக்கை ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கின்றேன். என்னைச் சூழ சுமார் பத்து பயணிகள் இருக்கின்றார்கள். இவர்களுள் இரு முதியவர்கள் தனித் தனியே வந்தவர்கள். ஐந்து பெண்களும் ஒரு ஆண்ணுமாக இன்னொரு அறுவர் கொண்ட குழு தனியே பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த அறுவரிடமும் நான் பேசியதையே இந்த பதிவில் தரலாம் என இருக்கின்றேன்.
இவர்கள் அனைவரும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். கொள்கைக்காய் நடந்த போரிலே பழிவாங்கப்பட்ட வன்னி மக்களின் எச்சங்கள் இவர்கள் என்றால் மிகையாகாது. இன்று தம் வாழ்க்கைப் போருக்கு தயாராக்கிக்கொண்டிருக்கின்றார்கள். அந்த அறுவர் குழுவில் இருந்த ஐந்து பெண்களும், கொழும்பில் உள்ள ஒரு ஆடைத்தொழிற்சாலையில் பயிற்ச்சிக்காக வந்தவர்கள்.
TRISTAR APPAREL EXPERT LTD என்ற பெயரில் இயங்கக்கூடிய ஒரு தனியார் ஆடை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று, தமது கிளை ஒன்றை கிளிநொச்சியில் நிறுவ இருப்பதாகவும், இதற்காக
முன்கூட்டியே தொழிலாளர்களை கொழும்புக்கு அழைத்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பதாகவும் கூறினார்கள். அவர்கள் மேலும் இது பற்றி கூறும் போது, குறித்த ஆடைத்தொழிற்சாலை இரத்மலாணையில் இருக்கின்றது. தற்போது சுமார் 120 கிளிநொச்சியைச் சேர்ந்த பெண்கள் இத் தொழிற்சாலையில் பயிற்சி பெற்றுக்கொண்டிருக்கின்றனர். குறிப்பாக இவர்களது பயிற்சியானது இலத்திரனியல் இயந்திரங்களை கையாளுவது சம்பந்தப்பட்டது. இந்த பயிற்சியின் போது, இவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தருவதோடு, மாதாந்தம் பயிற்சிக்கால ஊதியமாக ரூ.7000 வழங்கப்படுகின்றது. இந்த பயிற்சியானது, குறிப்பாக 6 மாதங்கள் வரை நீடிக்கப்படும் என்று கூறினார்கள்.
இதை விட கிளிநொச்சியிலும் இவர்களுக்கான ஆரம்ப கட்ட பயிற்சிக்கள் வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாது குறித்த தொழிற்சாலைக்காக கிளிநொச்சியில் இட ஒதுக்கீடுகள் அனைத்தும் முடிந்த நிலையில், மிக விரைவிலேயே இவர்களுக்கான ஒரு தொழிற்சாலை ஒன்று கட்டப்பட்டு, அதில் எம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட இருக்கின்றது.
மேற்கண்ட செய்தியை சிலவேளைகளில் நீங்கள் யாராவது அறிந்திருக்கக்கூடும். ஆனால், நான் தற்போது தான் அதுவும் சம்பந்த பட்டவர்கள் சொல்லுகின்ற போது தான் கேட்க நேர்ந்தது. அடிமேல் அடிவாங்கிய எம் மக்கள், சற்றே நிம்மதிப்பெருமூச்சு விட்டு தலையைத் தூக்கி பார்க்க நினைக்கின்ற இவ்வேளை, இது போன்ற நிறுவனங்களின் வருகை வரவேற்கத்தக்க விடயமே. இருப்பினும் இங்கும் நம் மக்களை அடிமைப்படுத்தி, அவர்களது உழைப்பைச் சுறண்டாது இருந்தார்களானால் எம்மக்களும் உய்வதற்கு வழி பிறக்கும்.

4 Comments :, , , , , , , more...

பதிவர் சந்திப்பு 2010 ;)

by on Dec.09, 2010, under பதிவுலகம்

இலங்கையில் முன்னெப்போதும் இல்லாதவாறு நாடு முழுவதும் மழை கொட்டிவருவது போல், பதிவுலகத்திலும் ஓர் புத்துணர்ச்சி பரவி பதிவுகளும் பின்னூட்டங்களும் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருக்கின்றன. சீரியஸ் பதிவாக இருந்தாலும், மொக்கைப் பதிவாக இருந்தாலும் அனைத்துமே சுவாரஷ்யமாக இருக்கின்றது. அதிலும் குறிப்பாக இந்த காலகட்டத்தில் பதிவர்களுக்கிடையேயான நெருக்கம் அவர்கள் பரிமாறிக்கொண்ட பின்னூட்டங்களிலும் தொடர்பதிவு அழைப்புகளிலும் சிறப்பாகவே தெரிந்தது. இதன் உச்சக்கட்டமாக வருகின்ற மார்கழி 19ம் திகதி ( 19 Dec 2010 ) பதிவர் சந்திப்பு ஒன்று நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது என்பதை மிகுந்த மன மகிழ்வுடன் தெரிவுத்துக்கொள்கின்றோம்.

நீண்டநாட்களாக செயற்படுத்த முயன்று முயன்று ஏதோ காரணங்களால் தடைப்பட்ட பதிவர்களாகிய எமது சந்திப்பு நடைபெறுவதற்கு இன்னும் 10 நாட்கள் கூட இல்லாத வேளையில், பதிவர் சந்திப்பு பற்றிய சிறிய விளக்கத்தை கொடுக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். அதே நேரத்தில், அனைத்து இலங்கைத் தமிழ் பதிவர்கள், பதிவுலக ஆர்வளர்கள், வாசகர்கள், ஊடகவியளாலர்கள் என அனைவரையும் வருக வருக என வரவேற்கின்றோம்.

நிகழ்வு: பதிவர் சந்திப்பு 2010

திகதி: 19-12-2010

நேரம்: காலை 09:31

இடம்: கைலாசபதி அரங்கு, தேசிய கலை இலக்கியப்பேரவை(ரொக்சி திரையரங்குக்கு எதிரில்),
காலிவீதி, வெள்ளவத்தை, கொழும்பு –06

நிகழ்ச்சி நிரல்

  • அறிமுகவுரை
  • பதிவர்கள் அறிமுகம்
  • கலந்துரையாடல் 1 – கூகுல் குழுமத்தை வினைத்திறனுடன் பயன்படுத்தல் மற்றும் ஏனைய தொழிநுட்பப் பிரச்சினைகள் பற்றி ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 2 – தமிழ் தட்டச்சு கருவிகளும், அவற்றைப் பற்றிய ஆய்வுகளும் கருத்துக்களும்.
  • இடைவேளையில் இன்னிசை.
  • கலந்துரையாடல் 3 – பதிவுலகைத் தாண்டி பதிவர்கள் வழங்ககூடிய பங்களிப்புகளை ஆராய்தல்.
  • கலந்துரையாடல் 4 – பதிவர்களிடையே பதிவுலகம் சார் போட்டித் தன்மையை ஏற்படுத்தலும், அண்மைக்கால பதிவுலகில் உள்ள தொய்வுநிலை பற்றிய கருத்துப் பரிமாற்றமும்.
  • பதிவர்கள் தங்களுக்கிடையேயான கருத்து பரிமாற்றம்.
  • நன்றியுரை.

எனவே அனைவரையும் சந்திப்பில் கலந்து சிறப்பிக்கும் வண்ணம் வரவேற்கின்றோம்.

இந்த பதிவர் சந்திப்பை பற்றிய மேலதிக தகவல்களை நிரூஜா, வதீஸ், அனுதினன்,வரோஅஷ்வின், பவன். ஆகிய ஏற்பாட்டு குழு அங்கதவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும். வெளியூரிலிருந்து வந்து கலந்து கொள்ள விரும்புவோரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் 13ம் திகதிக்கு முன்னதாக அஷ்வின்னை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

இலங்கைத் தமிழ் பதிவர் சந்திப்பு 2010 இற்கு Earthlanka நிறுவனத்தினர் அனுசரணை வழங்குகின்றனர் என்பதை நாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம். இந்த பதிவர் சந்திப்பை ஒட்டி, காணொளி ஒன்றும், பல அளவுகளில் அசையும் மற்றும் அசையா தட்டிகளும் உருவாக்கியிருக்கின்றோம். தயவு செய்து அவற்றை உங்களுடைய வலைபூவில் தவழவிடுவதன் மூலம் உங்களின் ஆதரவை தெரிவித்து எம்மைப் பலப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பதிவர் சந்திப்பு தொடர்பான தட்டிகளுக்கான வரைகள் இந்த இணைப்பிலே கிடைக்கப்பெறும்.

7 Comments :, , , , , more...

தென்னங்கீற்று இடையழகே…!

by on Dec.02, 2010, under கவிதைகள்

மலைகளெல்லாம்
எழுந்து நின்று;
மழை முகிலை
ஒன்று கூட்ட…!

மலர்வாசம்
பிழிந்தெடுத்து; - நறு
மணத்தென்றல்
உருவாக…!

தென்றலதன்
மென்மை கண்டு;
தேம்பி முகில்
கண்கசிய…!

தென்றலவள்
வருகைக்காய்;
தெருமுனையில்
காத்திருந்தேன்…!

தென்றலென
அழைத்தாலும்;
கூடிச் சண்டை
பிடித்தாலும்…!

தென்னங்கீற்று
இடையழகே;
நீயெனக்கு
உயிரம்மா…!

உன் மேனி
நிறை ஓவியமெலாம்;
ஒன்றையொன்று
உயர்த்தி நிற்கும்…!

எத்துணை தான்
அழகாக உன்;
மேனியெலாம்
மிளிர்ந்தாலும்…!

உன் செவ்விதழில்
பூத்திருக்கும்;
புன்னகைக்கு
நிகருமுண்டோ…!

5 Comments :, , , , , , , more...

வந்தவர்கள்

free counters