செவ்வானச் சிதறல்கள்…

பூ + நதி + rude

by on Jun.09, 2010, under கிறிகட், விளையாட்டு

பூ -> குஷ்பு

பிறப்பிலே இஸ்லாமியரான எங்கட குஷ்பு அக்கா, முதல் முதலில் 1980ல் குழந்தை நட்ச்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ரஜனி, கமல், பிரபு, சத்தியராஜ், மம்முட்டி, மோகன்லால் என அனைத்து பிரபல சோடியாக நடிச்சவா. (கடைசிய விஜயிண்ட படத்திலயும் வந்தவா) ஒரு காலகட்டத்தில அவருக்கு கோயில் கட்டி கடவுளா கும்பிடுமளவுக்கு மக்களிட்ட இவருக்கு மதிப்பும் வரவேற்பும் இருந்திச்சு. அந்த கோயில் கூட பாதிகட்டின படி வச்சிருந்தவ கனகாலமாய். சின்னத்தம்பி படத்தில இவா எடுத்து நடிச்ச பாத்திரத்துக்காக பிறகு குஷ்புவுக்கு  தமிழ்நாட்டு பொம்பிளைகள் கனபேரிட்டையும் நல்ல வரவேற்பு கிடைச்சுது.

இதற்கிடையில ஒரு எயிட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில எண்டு நினைக்கிறன், பெண்கள் கலியாணத்துக்கு முதல் பாதுகாப்ப உடலுறவு கொள்வதில எந்த தவறும் இல்லை எண்டு சொன்னா. அவ்வளவு தான் தமிழ் நாட்டு சனம் முழுக்க அவாவுக்கு எதிரா நிறைய கதைச்சினம். சும்மா தண்ணி எடுக்கிற இடத்திலயோ, ரேசன் கடையிலையோ கதைச்சுட்டு விட்டிருந்தா பரவாயில்லை தமிழ் நாடு முழுக்க கிட்டத்தட்ட 20 வழக்கு குஷ்புக்கு போட்டுச்சினம். இப்ப கிட்டடியில தான் இந்திய உயர்நீதிமன்றத்தில குஷ்பு உந்த எல்லா வழக்குகளையும் தள்ளுபடிசெய்யச் சொல்லி போட்ட வழக்கை எழுத்து நடத்தினவை.

என்ன இருந்தாலும் குஷ்புவுக்கு இருந்த அந்த பிரபலம் மட்டும் குறையேல்ல. ஏன் இன்னும் சொல்லப் போனா, இவா செஞ்ச ஜாக்போட் நிகழ்ச்சி எண்டாலும் சரி, கல்கி போன்ற தொடர்களாக இருந்தாலும் சரி இவாவுக்கு சனத்திட்ட இருந்த வரவேற்பால கிடைச்ச வெற்றி தான். அவா ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உடுத்துக்கொண்டு வாற புடவையையும் (கதவு வச்ச) இரவுக்கையையும் பாக்கிறதுக்காக ஒரு கூட்டம் ஜாக்போட் பாத்தவை தான். அது வேற கதை. பிறகு அவா தி.மு.க வில போய் சேர ஜெயா தொலைக்காட்சி அவாவை ஒரேயடியா நிகழ்ச்சியில இருந்து தூக்கீட்னம். கெதியா, கலைஞர் தொலைக்காட்சியில புதிசா ஒரு நிகழ்ச்சியோட வந்தாலும் வரலாம்.

ஆனா இப்ப என்ன கதைக்கினம் எண்டா, அவா தி.மு.க தயவோட திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை நிக்கப்போறாவாம். சரி எப்பிடியோ நல்லா இருந்தா சரி; நாங்கள் அடுத்த விசயத்துக்கு போவம்.

நதி -> நதியா

அந்தக்காலத்தில நதியா படத்தில நடிக்கேக்கையே, நதியா ஸ்டைல் எண்டு நதியா செருப்பு, நதியா கிளிப், நதியா கொண்டை அது இது எண்டு நதியாவால பாதிக்கப்பட்ட ஆக்கள் நிறைய. பிறகு அவா கலியாணம் கட்டி அமெரிக்காவில இருந்திட்டா. திரும்ப சில வருசத்துக்கு முதல் வந்து திரும்ப முதல் படம் நடிக்கேக்க ( எம்.குமரன்) அப்ப பாத்த மாதிரியே இப்பவும் இருக்கிறா எண்டு அவாவிண்டை அழகை வர்ணிக்காதோர் இல்லை. இப்ப என்ன விசயம் எண்டா, ஜெயா தொலைக்காட்சி மறுபடியும் ஜாக்போட் நடத்திறதுக்கு ஒரு ஆளைத் தேடி, கடைசியா போய்க் கேட்ட இடம் இந்த என்றும் வற்ற நதி தானாம். சாரி நதியா தான். அவாவும் ஓமெண்டுடாவாம். இப்ப என்ன கவலை எண்டா, முந்தி யெண்டாலும் பரவாயில்லை, விதம் விதமா இரவுக்கை தான் போட்டு கொண்டு வந்தவா குஷ்பு. இவா இனி என்ன எல்லாம் போடப்போறாவோ. இன்னும் எத்தின ஸ்டைல்களை உருவாக்க போறாவோ. குடும்பத்தலைவர்களே… உசார்… உசார்… :P

rude -> Rude Koertzen

கிரிக்கட் பாக்கிற யாருமே இந்தால மறக்க மாட்டினம். ஒரு கறுப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு, தலையில ஒரு வட்ட தொப்பி போட்டுக்கொண்டு, சிலோ மோஷன்ல இந்தால் எப்ப ஒற்றை விரல்லை தூக்கி காட்டும் எண்டு தெரியாது. ஆனா நடுவர்களிலையே இந்தால் இரு சிங்கம் தான். இவர் ஆட்டமிழந்ததை காட்டும் விதமே சொல்லும், நீ காலால விக்கட்டை மறச்சிட்ட கெதியா வெளிய போ…, இந்த போட்டியில் இனி நீ விளையாட ஏலாது எண்டு. அப்பிடி தனக்கு எண்டு ஒரு தனி முறையை வைச்சிருந்தவர்.

இப்ப சிங்கத்துக்கு 61, வயசு;  106 டெஸ்ட் போட்டியிலயும், 200 க்கு மேற்பட்ட ஒருநாள் சர்வதேச போட்டிகளிலையும் நடுவராய் இருந்தவர். 1992 மார்கழி  9ம் திகதி இந்தியாவுக்கும் தென்னாபிரிக்கவூகும் போர்ட் எலிசபத்தில நடந்த போட்டி தான் இவர் நடுவரா போன முதல் போட்டி. பிறகு, அந்த கிழமையே டெஸ்ட் போட்டியிலையும் நடுவரா போனவர் இந்த மனிசன். ஆனா இந்தால் தொப்பியை களட்டிடா இந்தாளை அடையாலம் கண்டுபிடிக்கிறது பயங்கர கஷ்டம்.

இப்ப என்ன விசயம் எண்டா, இவர் இண்டைக்கு இலங்கை சிம்பாவே விளையாடின இறுதிப் போட்டி தான் இவருக்கு கடைசி ஒருநாள் சர்வதேச போட்டி. அடுத்து பாக்கிஸ்தானுக்கும் இங்கிலாந்துக்கும் நடக்கிற டெஸ்ட் போட்டி தான் இவருக்கு கடைசி போட்டி.

என்னைப் பொறுத்தவரை, மனிசன் ஒரளவுக்கு நல்லா தான் நடுவர் வேலை செஞ்சது. எங்கட அசோக டீ சில்வா போல இல்லாமல், ஓரளவுக்காவது சரியா தீர்ப்பு சொல்லியிருக்கு.  இண்டைக்கு நேர்முக வர்ணனையில சொன்ன மாதிரி, இனியாவது போய் மீன் பிடிக்கட்டும்; கோல்ப் விளையாடட்டும். மனிசன் கிட்டத்தட்ட 20 வருசம் மைதானத்தில நிண்டே வெறுத்திருக்கும்.

:, , , , ,

3 Comments for this entry

  • வந்தியத்தேவன்

    குஷ்பு ஆண்டியை விட நதியா ஆண்டி இன்ன்னும் இளமையாக இருக்கின்றார். ரூடி திறமையான நடுவர் ஆனாலும் நியூசிலாந்து பவுடன் போல் ரசனையானவரல்ல.

  • nirujah

    //ரூடி திறமையான நடுவர் ஆனாலும் நியூசிலாந்து பவுடன் போல் ரசனையானவரல்ல.
    மேலே இருந்த காணொளியைப் பார்த்தீங்களா… என்ன தான் பவுடன் இரசனையானவராக இருந்தாலும், ஆட்டமிழந்ததாக அறிவிக்க கையை எடுத்து விட்டு, மீண்டும் அதை மறைக்கும் சாமர்த்தியம் தெரிந்தவர் :P

  • யோகா

    குஷ்பு மாதிரி இல்லாம நதியா கொஞ்சம் டீசன்டாக இருப்பாள் என நினைக்கிறேன்.

Leave a Reply

Notify me of followup comments via e-mail. You can also subscribe without commenting.

வந்தவர்கள்

free counters